High Uric Acid Symptoms : நைட்ல இந்த 4 அறிகுறிகள் இருக்கா? உடம்புல யூரிக் அமிலம் அதிகம் இருக்கும் ஜாக்கிரதை

Published : Sep 09, 2025, 01:14 PM IST

உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
15
High Uric Acid Symptoms

யூரிக் அமிலம் என்பது நம் உடலில் இயற்கையாகவே உருவாகும் ஒரு கழிவு பொருள். இது பியூரினின் முறிவால் உருவாகிறது. ஆனால் சிறுநீரகம் அதை வடிகட்டி வெளியேற்றுகிறது. இருப்பினும் சில சமயங்களில் உடலில் அதன் அளவு அதிகமாக இருக்கும் போது உடலில் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால் சில அறிகுறிகள் அதை வெளிப்படுத்தும். அதுவும் குறிப்பாக இரவில் தான். எனவே இரவில் தோன்றும் அதன் அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்க கூடாது. சரி இப்போது இந்த பதிவில் நம் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது இரவில் எந்த மாதிரியான அறிகுறிகள் காணப்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

25
கடுமையான மூட்டு வலி

ஒவ்வொரு இரவும் நீங்கள் கடுமையான மூட்டுவலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், உங்களது உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கிறது என்பதற்கான பொதுவான அறிகுறியாகும். யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது அது உடலின் மூட்டுகளில் படிகங்களாக படிந்து விடும். இதன் விளைவாக குதிங்கால், கணுக்கால், முழங்கால்கள் ஆகிய இடங்களில் வலியை ஏற்படுத்துகிறது. அதுவும் இந்த வலி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பதால், உங்களது தூக்கம் பாதிக்கப்படும்.

35
மூட்டுகளில் வீக்கம் மற்றும் விறைப்பு

மூட்டுகளில் வலி, வீக்கம், சிவத்தல், எரிச்சல் ஆகியவையும் அதிக யூரிக் அமிலத்தின் அறிகுறியாகும். இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் ஒரே நிலையில் படுபதன் மூலம் மூட்டுகளில் ரத்த ஓட்டம் பாதித்து விறைப்பை அதிகரிக்கும். பிறகு காலையில் எழும்போது காலை நகர்த்த கூட முடியாத அளவுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கம் மற்றும் விறைப்பு முழங்கால்களில் தெளிவாக காணப்படும்.

45
அடிக்கடி சிறுநீர் கழித்தல்

அதிக யூரிக் அமிலம் சிறுநீரகங்களுடன் நேரடியாக தொடர்பை கொண்டுள்ளது. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும் போது சிறுநீரகங்களில் கூடுதல் அளித்ததை ஏற்படுத்தும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். அந்த நேரத்தில் சிறுநீரின் அளவு குறைவாக இருக்கலாம். ஆனால் சிறுநீர்ப்பை முழுமையாக காலியாகவில்லை என்றால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

55
அதிகப்படியான வியர்வை

அதிகப்படியான யூரிக் அமிலத்தின் காரணமாக உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் தொடர்ச்சியான வலி நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இதன் காரணமாக இரவில் அதிகமாக வியர்க்கும் அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட காரணம் இல்லாமல் அமைதியின்மை மற்றும் சங்கடத்தை உணர்வீர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories