மலச்சிக்கல் என்பது நல்ல மனநிலையில் தலையிடக்கூடிய மோசமான உடல்நலப் பிரச்சனையாகும். துரித உணவு, மது அருந்துதல், அளவுக்கு மீறிய உணவு உட்கொள்ளுதல், உணவில் போதிய நார்ச்சத்து இல்லாமை, போதிய நீர் எடுத்து கொள்ளாதது, அதிக இறைச்சி ஆகியவை மலச்சிக்கலை உண்டாக்கும். புகைபிடித்தல், உடற்பயிற்சியின்மையும் இதில் அடங்கும். சமச்சீரான உணவை உண்பதும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலமும் மலச்சிக்கலை முற்றிலுமாகத் தடுக்கலாம்.
மலச்சிக்கல் இருந்தால், ஒரு டம்ளர் மிதமான சூடுள்ள நீரில் ஒரு டீஸ்பூன் வறுத்து பொடித்த பெருஞ்சீரகத்தை கலந்து கொள்ளுதல். செரிமான செயல்முறையை மேம்படுத்தும்.
இஞ்சி, எலுமிச்சைச் சாறு ஆகியவை கலந்து குடிக்கலாம். புளி, கருப்பட்டியால் தயாரித்த பானமும் மலச்சிக்கலுக்கு நல்லது. இரவில் படுக்கும் முன்பு கடுக்காய் கஷாயமோ, திரிபலா சூரணமோ சாப்பிட்டு உறங்குங்கள். மலச்சிக்கல் பிரச்னை விலகும்.
தினமும் இரவு சப்போட்டாப் பழத்தை உண்ணலாம். இதனால் நல்ல தூக்கம் வருவதோடு, காலையில் எழுந்ததும் மலம் கழிக்க சிரமம் இல்லாமல் இருக்கும்.
பேல் பழம் ( Bael Fruit) மலச்சிக்கலுக்கு ஏற்றது. பேல் பழத்தின் சாறு, சிறிது புளி தண்ணீர், வெல்லம் ஆகியவை கலந்து பேல் சர்பத் செய்து அருந்தலாம். நீரிழிவு நோயாளி எனில் பேல் பழம் உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.