Wheat Food : மைதா வேணாம்! ஆனா பரோட்டா, பப்ஸ் சாப்பிடணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

Published : Sep 19, 2026, 03:48 PM IST

Wheat Food : மைதா வேணாம்! ஆனா பரோட்டா, பப்ஸ் சாப்பிடணுமா? அப்படி மைதாவுக்கு பதிலாக கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்யப்பட்டும் உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
மைதாவுக்குப் பதிலாக கோதுமை

மைதாவில் செய்யப்பட்ட பரோட்டா, நான், பிரட், பன், பீட்சா, பர்கர், கேக், பிஸ்கட், சமோசா, பப்ஸ் என பல உணவுகளைப் பார்க்கும்போதே சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்படும். ஆனால், இவற்றை அடிக்கடி சாப்பிடுவது உடல்நலத்திற்கு ஏற்றதல்ல என்பதால், பிடித்த உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.

அப்படியெல்லாம் செய்ய வேண்டிய அவசியமில்லை. மைதாவுக்கு பதிலாக கோதுமை மாவைப் பயன்படுத்தி, இதுபோன்ற பல உணவுகளை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடலாம். அப்படி மைதாவுக்கு பதிலாக கோதுமையில் செய்யக்கூடிய உணவுகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

26
மைதாவுக்குப் பதிலாக கோதுமையில் செய்யக்கூடிய உணவுகள்

கோதுமை பரோட்டா

மைதா பரோட்டாவுக்குப் பதிலாக நார்ச்சத்து கொண்ட கோதுமை மாவில் பரோட்டா செய்யலாம். கோதுமை மாவுடன் சிறிதளவு எண்ணெய், உப்பு, தண்ணீர் சேர்த்து மாவு பிசைந்து தயாரிக்கலாம். எண்ணெய் அதிகம் சேர்க்காமல் தயாரிப்பது தினசரி உணவுக்கு சிறந்தது.

36
கோதுமை நான்

கோதுமை மாவுடன் தயிர், சிறிதளவு உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து மென்மையாக பிசையவும். மாவை குறைந்தது 1–2 மணி நேரம் மூடி ஊறவிடவும். பின்னர் சிறு உருண்டைகளாகப் பிரித்து, நான் வடிவில் தேய்க்கவும். சூடான தவாவில் போட்டு இருபுறமும் நன்றாக வேகவைத்து, விருப்பமிருந்தால் சிறிது நெய் தடவலாம். காய்கறி குருமா, தால் அல்லது தயிருடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.

46
கோதுமை பிரட்

கடைகளில் கிடைக்கும் வழக்கமான வெள்ளை பிரட்டுக்கு மாற்றாக 100 சதவீதம் whole wheat bread அல்லது வீட்டிலேயே தயாரிக்கும் கோதுமை பிரட்டை சாப்பிடலாம். வாங்கும்போது லேபிளில் "whole wheat" என்ற குறிப்பை பார்த்து வாங்குவது நல்லது.

56
கோதுமை பீட்சா

பீட்சா பேஸை மைதாவுக்கு பதிலாக முழு கோதுமை மாவில் தயாரிக்கலாம். அதன் மேல் காய்கறிகள், காளான், சோளம் போன்ற சத்தான பொருட்களை சேர்க்கலாம். சீஸ் அளவை தேவைக்கேற்ப குறைத்து பயன்படுத்தலாம். இதன் மூலம் வழக்கமான மைதா பீட்சாவுக்கு மாற்றாக வீட்டிலேயே சத்தான பீட்சா தயாரிக்க முடியும்.

66
கோதுமை சமோசா

கோதுமை மாவைப் பயன்படுத்தி மொறுமொறுப்பான மற்றும் ஆரோக்கியமான சமோசா செய்வது எளிது. சமோசாவின் வெளிப்புற மாவை மைதாவுக்குப் பதிலாக கோதுமை மாவில் தயாரிக்கலாம். மேலும், எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக oven அல்லது air fryer பயன்படுத்தும் முறையையும் தேர்வு செய்யலாம்.

இன்னும் என்னென்ன செய்யலாம்?

கோதுமை மாவை வைத்து கோதுமை பிஸ்கட், கேக், ரொட்டி, வெஜிடபிள் ரோல், கோதுமை சாண்ட்விச், பன், பப்ஸ், கோதுமை குக்கீஸ் மற்றும் க்ராக்கர்ஸ் போன்றவற்றையும் தயாரிக்கலாம்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது

மைதாவை தவிர்க்கிறோம் என்பதற்காக கோதுமை மாவில் செய்யப்படும் அனைத்து உணவுகளையும் அதிகமாக சாப்பிடலாம் என்று அர்த்தமில்லை. எண்ணெய், சர்க்கரை, உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களின் அளவையும் கட்டுப்படுத்துவது முக்கியம்.

Read more Photos on
click me!

Recommended Stories