- குதிகள் வலி உள்ள இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.
- சூடான நீரில் உப்பு போட்டு கால்களை சிறிது நேரம் அப்படியே வைத்தால் குதிகால் வலி சரியாகும்.
- கால்களுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால், ரத்த ஓட்டம் மேம்படும். இதனால் குதிகால் வலியும் குறையும்.
- நீங்கள் அணியும் காலணி சரியானதா இல்லையா என்பதை பாருங்கள். சரியான காலணி அணிந்தால் குதிகால் வலி வராது.
- உங்களது உயரம் மற்றும் வயதிற்கு ஏற்ப உங்களது எடையை கட்டுக்குள் வைத்தால் குதிகால் மீது அழுத்தம் ஏற்படாமல் இருக்கும். இதனால் வலியும் வராது.
குறிப்பு : வீட்டு வைத்தியங்கள் செய்தும் உங்களுக்கு குதிகால் வலி சரியாகவில்லை என்றால், உடனே மருத்துமனைக்கு சென்று அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.