தூக்கம் என்பது நம் ஆரோக்கியத்தில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நல்ல தூக்கம் உடலை ரீசார்ஜ் செய்ய உதவுகிறது. மேலும் புதிய நாளுக்கான நேர்மறையான கண்ணோட்டத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.
ஆனால் அதே நேரம் மோசமான தூக்கம், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. நல்ல தூக்கம் இல்லாத போது எரிச்சல், விரக்தி மற்றும் ஆரோக்கியமற்றதாக உணர வைக்கும்.
sleep
பெரும்பாலும் பல காரணங்களால், இரவில் முழுமையான மற்றும் ஆரோக்கியமான தூக்கம் கிடைக்காமல் போகலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், தினமும் சின்ன சின்ன பழக்கங்களை பின்பற்றுவது, நமது வாழ்க்கை முறையை மாற்றுவது நமது தூக்கத்தின் தரத்தை மாற்ற உதவும்.
"இந்த எளிய பழக்கங்களை உங்கள் அன்றாட வழக்கத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம், உங்கள் சர்க்காடியன் தாளத்தை சீரமைக்கலாம், மெலடோனின் மற்றும் கார்டிசோல் உற்பத்தியை சமநிலைப்படுத்தலாம். மன அழுத்தத்தைக் குறைக்கலாம், இறுதியில் தூக்கம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தலாம்" என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
காலை சூரிய ஒளியைப் பெறுங்கள்: காலை சூரிய ஒளியில் உடலை வெளிப்படுத்துவது, நாம் புத்துணர்ச்சி பெறவும், இயற்கையான பகல் மற்றும் இரவு சுழற்சியுடன் நமது தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை ஒத்திசைக்கவும் உதவும். இதனால் இரவில் நாம் வேகமாக தூங்கலாம்.
உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தை சரிசெய்யவும்: உறங்கும் நேரத்திற்கு அருகில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது ஓய்வெடுக்கும் திறனைப் பாதிக்கலாம். பகல் நேரத்தில் தீவிரமான உடற்பயிற்சியை நாம் திட்டமிட வேண்டும்.
ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் எழுந்திருங்கள்: நாம் தினமும் ஒரே நேரத்தில் தொடர்ந்து எழுந்திருக்கத் தொடங்கும் போது, அந்த வழக்கத்திற்கு ஏற்ப நம் உடலைச் சரிசெய்து அதை ஒரு பழக்கமாக மாற்ற உதவுகிறது.
காபி இடைவெளி : ஒரு நாளின் கடைசி கப் காபிக்கும் நாம் உறங்கும் நேரத்துக்கும் இடையே ஆரோக்கியமான 8-10 மணிநேர இடைவெளியை நாம் பராமரிக்க வேண்டும். காஃபின் தூக்கத்தை சீர்குலைக்கும், படுக்கைக்கு செல்லும் முன் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
சமச்சீரான உணவு: இரவில் சமச்சீரான உணவை உட்கொள்ளும் போது, அது உடலின் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து, கார்டிசோல் அளவு அதிகரிப்பதைத் தடுக்க உதவுகிறது. படுக்கைக்கு முன் அதிக எண்ணெய் அல்லது காரமான உணவுகளை உட்கொள்வதை நாம் தவிர்க்க வேண்டும்.