இரவில் குழந்தைகளுக்கு பால்; அம்மாக்கள் செய்யும் தவறு!!

Milk for Children : இரவு தூங்கும் முன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு பால் குடிக்க குடிக்கிறார்கள். மேலும் அது நன்மை பயக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையா? 

குழந்தைக்கு நைட் பால் கொடுக்குறீங்களா? தெரியாம அம்மாக்கள் செய்யும் தவறு!!

பால் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நாம் அனைவரும் அறிந்ததே. பால் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். இதில் புரதம் மற்றும் பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதனால்தான் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே பால் குடிக்க கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதன் காரணமாக தாய்மார்கள் பலர் இரவு தூங்க செல்லும் முன் குழந்தைகளுக்கு பால் குடிக்க கொடுக்கிறார்கள். மேலும் இரவு நேரத்தில் பால் கொடுப்பது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை வேண்டும் என்று பல பெற்றோர்கள் நம்புகிறார்கள். இந்த எண்ணத்தில் நீங்களும் உங்களது குழந்தைக்கு இரவு தூங்கும் முன் பால் குடிக்க கொடுக்கிறீர்களா? ஆம், என்றால் கொஞ்சம் கவனமாக இருங்கள். இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு பால் குடிக்க குடிப்பது அவர்களது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதற்கான காரணம் என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு ஏன் பால் கொடுக்கக் கூடாது?

தூக்கம் பாதிக்கப்படும் :

இரவு நேரத்தில் குழந்தைகள் பால் குடித்துவிட்டு தூங்கினால் அது அவர்களுக்கு நன்மை பயகும் என்று பல பெற்றோர்கள் நம்புகிறார்கள். ஆனால் அது தவறு. ஏனெனில் பாலில் இருக்கும் லாக்டோஸ், குழந்தைகளின் தூக்கத்தை தொந்தரவு செய்யும். இதனால் குழந்தைகளால் இரவு நிம்மதியாக தூங்க முடியாது.

சளி, இருமல் ஏற்படுத்தும் :

இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு பால் கொடுத்தால், அது அவர்களுக்கு சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும். 


வயிற்று வலி :

பால் அஜீரணம் வயிற்று வலியை ஏற்படுத்தும். உங்கள் குழந்தைக்கு ஏற்கனவே வயிற்று எரிச்சல் வயிற்று வலி இருந்தால் இரவு பால் குடிக்க கொடுக்க வேண்டாம். இது தவிர மலச்சிக்கல் சோர்வு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

எடையை அதிகரிக்கும் :

பால் எடையை அதிகரிக்க உதவுகிறது. எனவே உங்கள் குழந்தைக்கு ஏற்கனவே எடை அதிகமாக இருந்தாலோ அல்லது எடையை குறைக்க நினைத்தாலோ அவர்களுக்கு பால் இரவு நேரத்தில் குடிக்க கொடுக்க வேண்டாம்.

இதையும் படிங்க:  ஸ்கூல் போற குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டிய '5' ஊட்டச்சத்து உணவுகள்!!

உடலின் நச்சுத்தன்மை பிரச்சனை :

குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் பால் குடிக்க கொடுத்தால் அவர்களது உடலில் நச்சுத்தன்மை செயல்பாட்டில் சிக்கல் ஏற்படும் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.

குளிர்ந்த பால் கொடுக்காதீங்க :

சில சமயங்களில் தாய்மார்கள் அவசர அவசரமாக இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு குளிர்ந்த பாலை குடிக்க கொடுத்து விடுகிறார்கள். ஆனால் இது அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதையும் படிங்க:  பெற்றோரே! குளிர்காலத்துல குழந்தைங்களை நீரேற்றமாக  வைத்திருக்கும் சூப்பர் டிப்ஸ்!!

குழந்தைகளுக்கு பால் கொடுக்க சரியான நேரம்:

காலை உணவுக்கு பிறகு உங்கள் குழந்தைக்கு ஒரு கிளாஸ் பால் குடிக்க கொடுக்கலாம். குழந்தைகள் காலையில் பால் குடிப்பது மூலம் அவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். மேலும் பால் எளிதில் செரிமானம் ஆகிவிடும். குறிப்பாக உங்கள் குழந்தை பள்ளிக்குச் சென்றால் கண்டிப்பாக பள்ளிக்கு செல்லும் முன் உங்கள் குழந்தைக்கு பால் கொடுங்கள். இதனால் அவர்களது வயிறு நிறைந்திருக்கும்.

Latest Videos

click me!