
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவு பழக்கத்தால் உடலில் கொழுப்பு சேரும் பிரச்சனை தற்போது அதிகரித்துள்ளது. உடலில் அதிகளவு கொழுப்பு சேர்ந்தால் அது ஆபத்து. உடலில் கொழுப்பு இருப்பதற்கு என ஒரு குறிப்பிட்ட அளவுகோல் உள்ளது. அதன் அளவை தாண்டும் போது உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே சரியான உணவு முறை உடற்பயிற்சிகளை கடைப்பிடிக்காவிட்டால் உடலில் கெட்ட கொழுப்பு கண்டபடி ஏறிவிடும். பின்னர் அதை குறைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
உடலில் கொழுப்பு அதிகமாக சேரும்போது அது நரம்புகளில் படிந்து இதய நோய், உயரத்தை அழுத்தம், பக்கவாதம் போன்ற ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஆனால் நம்முடைய வீட்டுக்குச் செல்லில் இருக்கும் சில மசாலா பொருட்கள், உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதனால் உடலில் கொலஸ்ட்ரால் குறைவது மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது அது என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
இதையும் படிங்க: மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பு; அதை குறைக்க உதவும் 5 சிம்பிள் டிப்ஸ்!
மஞ்சள்:
மஞ்சள் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான மசாலா பொருளாகும். இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக இதில் இருக்கும் குர்குமின் பல நன்மைகளை வழங்குகிறது இது தவிர இதில் அலர்ஜி எதிர்ப்பு, ஆக்ஸினேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. அவை உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறித்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு ஒரு சிட்டிகை மஞ்சளை சூடான நீரில் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
இதையும் படிங்க: தினமும் முட்டை சாப்பிடுவதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா?
மஞ்சளின் நன்மைகள்:
- மஞ்சளில் இருக்கும் குறுக்குமின் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மேலும் தமிழிகளை சுத்தம் செய்யும்.
- இது வளர்ச்சியை மாற்றுவது துரிதப்படுத்தி எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
- மஞ்சளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது மற்றும் பலப்படுத்தும்.
- மஞ்சள் தமனிகளில் கொழுப்பு படிவதை குறைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
- மஞ்சளில் இருக்கும் பண்புகள் வாயு, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை போக்கி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
குறிப்பு : மஞ்சளை அதிகளவு எடுத்துக் கொண்டால் வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும் அதுமட்டுமின்றி உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை அல்லது உடல்நிலை பிரச்சினை இருந்தால் மஞ்சள் தண்ணீர் குடிப்பதற்கு முன் மருத்துவரை அணுகவும்.
வெந்தயம்:
வெந்தயம் சமையலறையில் பயன்படுத்தப்படும். மற்றொரு மசாலா பொருளாகும். இது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல வைட்டமின்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வெந்தயத்தில் உள்ளது. அதை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். வெந்தயத்தில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் கொழுப்பு கட்டுப்படுத்த உதவுகிறது. முக்கியமாக நரம்புகளில் படிந்து இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை அது கரைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிட வேண்டும். அந்த வெந்தயம் ஊற வைத்த தண்ணீரையும் குடிக்கலாம்.
வெந்தயத்தின் நன்மைகள்:
- வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால் இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும், இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதுதவிர பசியை கண்டுபிடித்து எடையை குறைக்கும்.
- வெந்தயம் செரிமான அமைப்பை மேம்படுத்தி அஜீரணம் போன்ற வயிற்று சம்பந்தமான பிரச்சினைகளை நீக்கும்.
- ஊற வைத்த வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- இவை தவிர வெந்தயத்தை பேஸ்டாக அரைத்து அதை தலைமுடிக்கு பயன்படுத்தினால் கூந்தல் நீளமாக வளர உதவும் மற்றும் தலைமுடி பிரச்சனைகளையும் நீங்குகிறது.
குறிப்பு : வெந்தயம் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கினாலும் சிலருக்கு அது ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் வயிற்று வலி, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் வெந்தயம் சாப்பிடும் முன் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.