சுண்டைக்காயை மக்கள் சாதாரணமாக நினைக்கிறார்கள். ஆனால் குட்டி உருண்டைகளாக இருக்கும் சுண்டைக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இந்த காயில் கால்சியம், புரதச்சத்து, இரும்புச்சத்து போன்றவை காணப்படுகின்றன. இதை உண்ணும்போது ரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்கள் வெளியேறுகின்றன. சுண்டக்காய் உண்பதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்சனைகள் நீங்கும். வாரத்தில் 3 நாட்கள் சுண்டைக்காய் உண்பதால் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
25
sundakkai health benefits for women in tamil
அதுமட்டுமின்றி இக்காயில் காணப்படும் பினைல்கள், குளோரோஜெனின்கள் போன்றவை இரைப்பையில் உண்டாகும் அழற்சியை குணமாக்கும். கணையத்தில் வரும் புண்களை குணப்படுத்த சுண்டக்காயை உண்ணலாம். பெண்கள் சுண்டைக்காயை உண்ணும்போது அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
35
sundakkai health benefits for women in tamil
பெண்களுக்கு நன்மை:
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்ய சுண்டக்காயை உண்ணலாம். மருந்து மாத்திரைகளை விட சுண்டைக்காய் உண்பதன் மூலம் இயற்கையான முறையில் மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்ய முடியும். எந்த பக்க விளைவுகளும் வராமல் மாதவிடாயை குணப்படுத்த சுண்டைக்காய் உண்ண வேண்டும். அதை எப்படி உண்ண வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
- சுண்டைக்காயை மோரில் ஊறவிட்டு அருந்த வேண்டும். முதலில் சுண்டைக்காயை வெயிலில் உலர வைக்க வேண்டும். அதை நன்கு தூளாக்கி மோரில் ஊறவிட்ட குடித்தால் மாதவிடாய் கோளாறு குணமாகும். சுண்டைக்காயில் உள்ள சப்போஜெனின் என்ற ஊட்டச்சத்து மாதவிடாயை சீராக்க உதவும். தினமும் 4 சுண்டைக்காய்களை வெறுமனே வாயில் மென்று தின்றால் ஹார்மோன் பிரச்சனை நீங்கி மாதவிடாய்கோளாறுகள் குணமாகிவிடும்.
- பெண்களுக்கு இன்றைய காலகட்டத்தில் பெரிய பிரச்சனையாக உள்ள நீர்க்கட்டி, தைராய்டு ஆகியவற்றின் காரணமாக மாதவிடாய் பிரச்சினை வரலாம். இதைத் தடுக்க நாள்தோறும் உணவில் சுண்டைக்காயை உண்ணலாம்.
- பெண்களில் பலர் ரத்த சோகையால் அவதிபடுகின்றனர். அதை குணமாக்க சுண்டைக்காயை அவ்வப்போது சாப்பிடலாம். ஒது ரத்தத்தில் ஹீமோகுளோபினை பெருக்க உதவும்.