கருத்தரிப்பதில் சிக்கல்.. இந்த பிரச்சனை இல்லைன்னா சீக்கிரம் அப்பா அம்மா ஆகிடலாம்!

First Published | Jan 19, 2023, 5:31 PM IST

கருவுறுதல் நிகழ்வில் ஆண், பெண் இருவருக்குமே உடல் எடை முக்கிய காரணியாக செயல்படுகிறது. பெண்களுடைய கர்ப்ப காலத்தில் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) கூடுதலா இருப்பது தாய், சேய் இருவருக்கும் நல்லதல்ல. 

உடல் எடை அதிகமாக இருப்பது ஆரோக்கியமில்லாத குறியீடாக கூறப்படுகிறது. பருமனானவர்களுக்கு உடல் நலக் கோளாறுகள் அதிகம் காணப்படுகிறது. உடல் நலக் குறைப்பாட்டால் பருமனாக மாறியவர்களும் உண்டு. உடல் எடை அதிகம் இருக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பருமனான ஆண்கள் விந்தணு தரம் குறையும். விந்தணு உற்பத்தி அளவும் குறையும் வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆண்களுக்கு பாதிப்பு 

உடல் எடை அதிகமானால் ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படலாம். இதனால் விந்தணுக்களின் தரம் குறையலாம். கருத்தரிக்க முடியாமல் தவிக்கும் தம்பதிகள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்வதால் இந்தப் பிரச்சனையை சரி செய்யலாம். உடல் எடை அதிமாக இருக்கும்போது ஆண்களின் விந்தணுவின் அளவு குறைந்து, தரமில்லாமல் இருக்கும். பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் சுரப்பின் அளவு கூடும். இதனால் கருவுறுதல் சிக்கலாகும். 

Tap to resize

பெண்களுக்கு பாதிப்பு! 

பெண்களின் உடல் எடை கூடுவது கருப்பை செயலிழப்புடன் தொடர்பு கொண்டுள்ளது. பிஎம்ஐ கூடுதலாக இருக்கும் போது கருத்தரிப்பதில் சிக்கல் உண்டாகும். ஹார்மோன் சீராக செயல்படாமல் இருக்கும் வாய்ப்புள்ளது. கருப்பையில் நீர்கட்டிகள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். அதிக எடையுடன் கரு தரித்தால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் வரலாம். உடல் பருமனாக இருக்கும் பெண்ணிற்கு அண்டவிடுப்பின் விகிதம் குறையும். கருத்தரிக்க விரும்பும் பெண்கள் 18.5 முதல் 24.9க்குள் பி.எம்.ஐ கொண்டிருந்தால் ஆரோக்கியமாக கருத்தரிக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். மற்றவர்கள் கருத்தரிக்கும்போது ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் வரக் கூடும். 

உடல் எடை பிரச்சனையா? 

கருத்தரிப்பதில் ஒவ்வொரு தம்பதியினரும் வெவ்வேறு சிக்கல்களை சந்திக்கலாம். உடல் எடை அதில் ஒரு காரணியை தவிர அது மட்டுமே காரணம் கிடையாது. உடல் எடையால், கருத்தரிப்பதில் சிக்கலை சந்திப்பவர்கள் மருத்துவரை அணுகி முறையான ஆலோசனை எடுத்துக் கொண்டு எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட வேண்டும். கர்ப்ப காலத்தில் நீங்கள் எவ்வளவு எடை அதிகரிக்க வேண்டும், கர்ப்பம் தரிக்க எவ்வளவு எடை குறைய வேண்டும் என்பது குறித்து மருத்துவர் முறையான ஆலோசனைகளை வழங்குவார். 

இதையும் படிங்க: மாதம் ஒரு முறை கூட தாம்பத்தியத்தில் ஈடுபட ஆர்வம் வரவில்லையா? இந்தச் சத்துக்கள் குறைந்தால் அப்படிதான்...

Latest Videos

click me!