எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் 5 உணவுப் பழக்கங்கள்..!!

First Published Jan 19, 2023, 12:51 PM IST

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது எலும்பு மற்றும் தசை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எலும்புகள் வலிமையுடன் இருப்பது அவசியம். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளை அளவுடன் சாப்பிடுவதன் மூலம், எலும்பு மற்றும் தசை வலுவடைகிறது. அந்த வகையில், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு பயன்படுத்த வேண்டிய சில உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
 

கீரை

கீரை இந்த பட்டியலில் முதலில் உள்ளது. இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. வழக்கமான காய்கறிகளை விடவும் கீரையில் அதிகளவு கால்ஷியம், மெக்னீஷியம் மற்றும் வைட்டமின் கே உள்ளது. இதன்மூலம் மனித உடலில் இருக்கும் அனைத்து எலும்புகளும் வலிமை பெறுகிறது.

Dall makkani

பருப்பு

நாம் சாப்பிடும் பருப்பு மற்றும் பயிறு வகைகள் இந்த பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது. பொதுவாகவே அனைத்து விதமான பருப்புகளிலும் துத்தநாகம் என்கிற சத்து நிறைந்து காணப்படுகிறது. இது குறைந்த கொழுப்பு மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

முட்டை

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பொருட்கள் முட்டைகள். முட்டை புரதங்களின் களஞ்சியமாகும். முட்டையிலும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. இதனால் தினமும் ஒரு முட்டையாவது சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு தேவையான வகையில் எதிர்ப்புச் சக்தியினை பெற முடியும். அதன்மூலம் எலும்பும் ஆரோக்கியம் பெறும். 
 

milk

பால்

நம்மில் பலரும் நாளின் தொடக்கத்தை பாலில் அருந்தி தான் துவங்குகிறோம். அதில் பாலில் கால்சியம், வைட்டமின் டி, பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு போதுமான வலிமை சேர்க்கிறது.
 

நட்ஸ் வகைகள்

சத்துக்கள் நிறைந்த பாதாம் போன்ற பருப்புகள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே சல்லா, கானாங்கெளுத்தி, மத்தி, இளநீர் போன்ற மீன்களையும் அடிக்கடி சாப்பிடுங்கள்.  

click me!