இந்தியாவில் மிகவும் பிரபலமான பானம் எது என்று கேட்டால், சந்தேகமில்லாமல் பால் கலந்த தேநீர் என்று சொல்லிவிடலாம். பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு கப் டீ அல்லது காபியுடன் தங்கள் நாளைத் தொடங்குவார்கள். இப்போது, நாளின் பல்வேறு நேரங்களில் சோர்வு, சலிப்பு அல்லது தூக்கம் வரும்போது கூட டீ குடிக்கத்தான் பலரும் விரும்புகின்றனர். இதன்மூலம அவர்களுக்கு ஏதோ உயிர்ச்சக்தி கிடைப்பதாக அவர்கள் நம்புகின்றனர். டீ குடிப்பது என்றால் டீ குடிப்பது மட்டுமில்லாமல், அதனுடன் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவது, பிஸ்கட், எண்ணெயில் பொரித்த கடி, பப்ஸ் போன்ற தின்பண்டங்கள் டீ உடன் சாப்பிடும் போது மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் தேநீருடன் உட்கொள்ளக் கூடாத சில உணவுகள் உள்ளன. அது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த உணவுகளை டீயுடன் சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் கூட அறிவுறுத்துகிறார்கள்.