Image: Getty Images
மனிதர்கள் உணர்வுகளால் வாழ்கிறவர்கள். தங்களை புரிந்து கொள்ள வேண்டும், அன்பு, பாசம், மகிழ்ச்சி, கோபம், கவலை, பயம் ஆகிய உணர்வுகளை பகிர்ந்து கொள்ள துணை வேண்டும் என்பதால் தான் காதல், திருமணம் ஆகியவற்றில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் உறவு காதல் தாண்டி காமம் வரையும் நீளுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வம் இருந்தால் தான் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இன்றி காணப்படும்.
Image: Getty Images
தாம்பத்தியத்தில் ஈடுபட ஆர்வம் வரவில்லையா?
மாதத்தில் ஒரு முறை கூட கணவனும், மனைவியும் மனதாலும், உடலாலும் இணையாமல் தவித்துக் கொண்டிருந்தால் குடும்பத்தில் அமைதி நிலவாது. உறவு வைத்து கொள்ள யாரேனும் ஒருவருக்கு ஆர்வம் இல்லாமல் போகலாம். இப்படி ஈடுபாடு இல்லாமல் இருப்பதற்கு உயிர்ச்சத்து குறைப்பாடு ஏற்படுவதும் காரணம் என்கிறது சித்த மருத்துவம். வைட்டமின்களில் பி3, பி9, சி, டி, ஈ ஆகியவை குறையும் போது தாம்பத்திய குறைபாடுகள் வரலாம். இந்தச் சத்துக்கள் குறைவில்லாமல் வைத்து கொள்ள வேண்டும். அதற்கு சைவ, அசைவ உணவுகளில் என்னென்ன உண்ணலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.
Image: Getty Images
சைவ உணவு
கேரட், பீட்ரூட், சின்ன வெங்காயம், பல்லாரி எனும் பெரிய வெங்காயம், பூண்டு, தக்காளி, முருங்கை காய் ஆகியவை உண்ணலாம். கீரை வகைகளில் முருங்கை கீரை, தூதுவளை கீரை, தாளிக்கீரை, பசலைக்கீரை ஆகியவை எடுத்து கொள்ளலாம். பூசணி விதைகள், பட்டர் பீன்ஸ், கடற்பாசிகள், வெண்ணெய், சோயாபீன்ஸ் போன்றவையும் அவ்வப்போது உண்ணலாம். வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு போன்றவை எப்போது வேண்டுமானாலும் உண்ணலாம்.
இதையும் படிங்க: குஜராத்தி சடங்குடன் ஆனந்த் அம்பானி-ராதிகா நிச்சயதார்த்தம்! மணமகன் வீட்டில் கொடுக்கும் பொருள் என்ன தெரியுமா?
பழங்கள்
பேரிச்சை, அத்தி, கருப்பு திராட்சை, மாதுளம்பழம் நேந்திரம், செவ்வாழை, அவகோடா, மாம்பழம், பலாப்பழம், துரியன் பழம், தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவையும் எடுத்து கொள்ளலாம். பெண்களின் விருப்ப இனிப்பு பண்டமான சாக்லேட்டும் உண்ணலாம். மனைவிக்கு இதை பரிசளித்து ரொமாண்டிக் மூவ் பண்ணுங்க ஆண்களே!
அசைவ உணவு
நாட்டுக்கோழி, வான்கோழி, சிவப்பு நிற இறைச்சி வகைகள், முட்டை, பால் ஆகியவை எடுத்து கொள்ளலாம். சூரை மீன், கணவாய், இறால், நண்டு, சுறா மீன், மத்திச் சாளை, கணவாய் மீன் ஆகிய மீன் வகைகளை எடுத்து கொள்ளுங்கள். இந்த உணவுகள் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு இருந்தால் குறைக்கும். ஆரோக்கியமான உணவுகள் உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் அளித்து, தாம்பத்தியம் சிறக்கச் செய்யும். சில உடற்பயிற்சிகளும் செய்யுங்கள்.
இதையும் படிங்க: மருத்துவ நன்மைகளை வாரி வழங்கும் தண்ணீர் விட்டான் கிழங்கு!