
Indian Diet Plan To Reduce Weight One Month : இந்திய உணவுகள் மூலம் எடையை குறைப்பது கடினம் என மக்கள் நினைக்கின்றனர். இந்திய உணவுகளின் அடிப்படையே கார்போஹட்ரேட் உணவுகள் தான். இங்கு அரிசி சோறு, இட்லி, தோசை இல்லாமல் பலரால் ஒருநாளை கூட கடக்க முடியாது. இந்த பதிவில் இந்திய உணவுகளின் டயட் ப்ளான் மூலம் ஒரே மாதத்தில் கணிசமாக எடையை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை காணலாம்.
உணவு திட்டத்தை பின்பற்ற நினைப்பவர்கள் சரிவிகிதமாக அனைத்து சத்துக்களையும் எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக புரதச்சத்து உணவுகளை அவசியம் எடுக்க வேண்டும். முழு தானியங்கள், புரதம், காய்கறிகள், பழங்கள், நல்ல கொழுப்புகள் உள்ள உணவினை சாப்பிட வேண்டும். தட்டு நிறைய சாப்பிடாமல் அளவாக சாப்பிடுவதும், அதிகமாக தண்ணீர் குடித்து நீரேற்றமாக இருப்பதும் முக்கியம். உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்த வேண்டும். நீங்கள் டயட் இருக்க விரும்பினால் சுகாதார நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள்.
காலை உணவாக ஆப்பம், இட்லி போன்றவை எடுக்கலாம். இவை கார்போஹட்ரேட்டாக இருந்தாலும் புரத உணவுகளுடன் அளவாக (2 அல்லது 3 எண்ணிக்கை) உண்ணும்போது எடையை அதிகரிப்பதில்லை. காய்கறிகள் போட்டு சமைத்த சம்பா ரவை உப்புமா அல்லது அவல் உப்புமா அல்லது பழங்களுடன் ஓட்ஸ் போன்றவை உண்ணலாம்.
- எண்ணெய்யில் பொரித்த உணவுகளை குறைக்க வேண்டும். எண்ணெய் பயன்படுத்தாமல் கிரில் செய்த சிக்கன் அல்லது மீன் அதனுடன் சாலட், சப்பாத்தி அல்லது கோதுமை ப்ரெட் உண்ணலாம்.
- மதிய உணவாக சோறு எடுத்துக் கொண்டாலும் 200கிராமிற்குள் எடுக்க வேண்டும். இத்துடன் பருப்பு வகைகள், காய் கூட்டு உண்ணவேண்டும். காய்கறிகளே சோற்றை விட அதிகம் உண்ண வேண்டியது. முட்டை எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக பிரியாணி உண்ணும்போது கறியை விட குஸ்கா குறைவாக உண்ண வேண்டும். இதுவே எடை குறைக்க உதவும்.
இதையும் படிங்க: தினமும் இரவில் 'இந்த' நேரத்தில் சாப்பிடுங்க!! எடை தானாக குறையும்
- இரவில் 2 இட்லி அல்லது சப்பாத்தி எடுத்து கொள்ளலாம். அதனுடன் காய்கறிகள், புரதம் போன்றவை உண்ணலாம்.
- கிரில் சிக்கன் அல்லது மீன் ஆகியவையுடன் புரதத்துடன் காய்கறி சூப்
- வேகவைத்த காய்கறிகள், தந்தூரி சிக்கன்
- பனீர் (பாலாக் பனீர், பாலாக் சீஸ்) பிரவுன் அரிசியுடன் குயினோவாவுடன் காய்கறி கூட்டு
இதையும் படிங்க: இந்த '4' பொருள் போதும்! தண்ணீரில் கலந்து குடிக்கங்க .. கொழுப்பு கரையும்!
- அளவில் சிறிய தட்டுகளில் சாப்பிடுங்கள். சாப்பிடும் அளவில் கவனமாக இருங்கள்.
- நாள் முழுவதும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.
- பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவேண்டும்.
- சர்க்கரை கலந்த பானங்கள், பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
- நார்ச்சத்து உள்ள கீரைகள், ப்ரோக்கோலி, பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும்.
- பாதம் போன்ற கொட்டைகள், விதைகள், வெண்ணெய் உள்ளிட்ட ஆரோக்கியமான கொழுப்புகளை அளவாக எடுத்து கொள்ளுங்கள்.
- தினமும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். வேகமான நடைபயிற்சி, நீச்சல் அல்லது யோகா உள்ளிட்ட ஏதேனும் ஒன்றினை தினமும் செய்யுங்கள்.
- சர்க்கரை சேர்க்கப்பட்ட சிற்றுண்டிகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.
- சர்க்கரை கலந்த பானங்களை குடிப்பதை தவிர்க்கலாம்.
- சர்க்கரை சேர்க்கப்பட்ட காபி, டீயை தவிருங்கள்.
- இனிப்பு வகைகளை அறவே தவிருங்கள்.
எந்த வழியிலும் மிக விரைவாக உடல் எடையை குறைப்பது ஆரோக்கியமற்றது. உடல் எடையை குறைக்க திட்டமிட்டால் முதலில் உங்களுடைய கொழுப்பு, ரத்தம், புரத அளவுகளை தெரிந்து கொள்ள லேப்பில் ஒரு டெஸ்ட் எடுத்து அதை ஒரு சுகாதார நிபுணரிடம் ஆலோசித்துவிட்டு புதிய உணவுத் திட்டத்தை பின்பற்றுங்கள்.