வெயில் காலத்துல எல்லாரும் சருமத்தை மட்டும் கவனிப்பாங்க. ஆனா, வெயிலாலும் மொபைல்/லேப்டாப் திரைகளாலும் அதிகம் பாதிக்கப்படுவது நம்ம கண்கள்தான். இந்த கோடையில் கண்களைப் பாதுகாப்பாகவும் குளிர்ச்சியாகவும் வைக்க சில எளிய டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக!
வெயில் காலத்துல ஏசி ரூம்ல உக்காந்து லேப்டாப் பார்த்தா கண் சீக்கிரம் வறண்டு போகும் (Dry Eyes). அதுக்கு தான் இந்த மேஜிக் ரூல்! ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும், 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை, 20 வினாடிகள் உற்று நோக்குங்கள். கண் ஸ்ட்ரெஸ் காணாமல் போகும்!
25
சன்கிளாஸ் வாங்குறப்போ இதைப் பாத்தீங்களா?
வெறும் கருப்பு கண்ணாடி போட்டா போதாது பாஸ்! அது UV 400 அல்லது '100% UV Protection' கொண்ட கண்ணாடியா இருக்கணும். வெயில்ல போகும் போது கண்ணாடி போடலனா, கண்ணோட லென்ஸ் சீக்கிரம் பாதிப்படையும், ஜாக்கிரதை!
35
ஸ்பூன் வச்சு கண்ணை குளிர வைக்கலாம்!
கண் எரிச்சலா இருந்தா ஐஸ் கட்டியை தேய்க்காதீங்க, அது கண்களை பாதிக்கும். ரெண்டு ஸ்டீல் ஸ்பூனை 10 நிமிஷம் ஃபிரிட்ஜ்ல வைங்க. அந்த ஜில்லுனு இருக்குற ஸ்பூனோட பின்பகுதியை அப்படியே கண்களுக்கு மேல வைங்க. கண் எரிச்சல், வீக்கம் எல்லாம் சட்டுனு பறந்துடும்!
கண்ணுக்கு குளிர்ச்சினாலே வெள்ளரிக்காய் தான் நினைவுக்கு வரும். ஆனா, உருளைக்கிழங்கு சாறுக்கு தனி பவர் இருக்கு! உருளைக்கிழங்கை மெலிசா கட் பண்ணி கண்ணுக்கு மேல வைங்க. இது வெயிலால் வர்ற கண் எரிச்சலைத் தடுத்து, கருவளையத்தையும் அடியோட காலி பண்ணும்.
55
கண்ணை அடிக்கடி கழுவாதீங்க!
வெயில்ல இருந்து வந்த உடனே முகத்தையும் கண்ணையும் குளிர்ந்த தண்ணியால வேகமா கழுவுவோம். அது தப்பு! வெயில்ல இருந்து வந்த உடனே கண்ணை கழுவினா 'தெர்மல் ஷாக்' (Thermal Shock) ஏற்படும். வியர்வை ஆறிய பிறகு, லேசான வெதுவெதுப்பான அல்லது சாதாரண தண்ணீரில் மென்மையாக கண்களை துடையுங்கள்.