Heartburn : சாப்பிட்டதும் நெஞ்செரிச்சலா? அப்ப இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடாதீங்க!

Published : Oct 30, 2025, 11:24 AM IST

சாப்பிட்ட பிறகு நெஞ்செரிச்சல் பிரச்சினை இருந்தால் உணவில் சில மாற்றங்களை செய்யுங்கள். நெஞ்செரிச்சல் பிரச்சனை இனி வரவே வராது.

PREV
17
Foods To Avoid For Heartburn

இன்றைய காலகட்டத்தில் நாம் வாழும் வாழ்க்கை முறையானது ரொம்பவே மோசமாக இருக்கிறது. இதனுடன் எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலில் பல பிரச்சனைகளை எதிர் கொள்கிறோம். இதனால் தற்போது வீக்கம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் பொதுவான விஷயமாகிவிட்டது.

27
Heartburn

நெஞ்செரிச்சல் காரணமாக மருந்துகள் எடுத்துக்கொண்டு அந்த நாளை எளிதாக கடந்து விடுகிறோம். ஆனால் நெஞ்செரிச்சலிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்க முதலில் செய்ய வேண்டியது உணவு பழக்கத்தில் மாற்றங்கள் செய்வதுதான். ஆம், நாம் சாப்பிடும் சில உணவானது நம்முடைய வயிற்றில் அமிலத்தை உற்பத்தி செய்து சாப்பிட்ட பிறகு நெஞ்செரிச்சலை ஏற்படுகிறது. எனவே சரியான உணவுகளை சாப்பிட்டால் இந்த பிரச்சனை வருவதை தடுக்கலாம். எனவே, சாப்பிட்ட பிறகு நெஞ்செரிச்சல் பிரச்சனை வருவதை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை மட்டும் தினமும் பின்பற்றினால் போதும். அவை என்ன என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

37
காஃபின் :

நீங்கள் ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பிறகு அதிகப்படியான நெஞ்செரிச்சலை சந்திக்கிறீர்கள் என்றால், காஃபின் கலந்த உணவுகள் சாப்பிடுவது முற்றிலும் தவிர்த்து விடுங்கள் இதில் டீ, காபி மட்டுமல்ல. பல பானங்கள் மற்றும் உணவுகளும் அடங்கும்.

47
பதப்படுத்தப்பட்ட உணவுகள் :

தற்போதைய வாழ்க்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஒரு மோசமான பகுதியாக மாறிவிட்டது. சிப்ஸ், சுத்திகரிக்கப்பட்ட மாவில் தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்ற பிற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம், நிறைவேற்ற கொழுப்பு, உப்பு போன்றவை உள்ளன. இவை நெஞ்செரிச்சலை அதிகரிக்கும். எனவே இது போன்ற உணவுப் பொருட்களை சாப்பிடுவதை நிறுத்தினால் நெஞ்செரிச்சல் பிரச்சனை வராது.

57
அதிகமாக சாப்பிடுதல்

உங்களுக்கு ஏற்கனவே அமில வீச்சு பிரச்சனை இருந்தால் ஒரே நேரத்தில் அதிகமான உணவை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் உடலானது அவற்றை சரியாக ஜீரணிக்க முடியாமல் போகும். இதனால் நெஞ்செரிச்சல் மேலும் அதிகரிக்கும்.

67
சாப்பிட்ட உடனே தூங்குதல்:

சாப்பிட்டு உடனே தூங்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் உடனே அதை நிறுத்தி விடுங்கள். அதுபோல இரவு உணவை படுக்கைக்கு செல்வதற்கு சுமார் 3 மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். இவற்றை பின்பற்றி வந்தால் உங்கள் வயிறு அணுகு உணவை எளிதாக ஜீரணித்து விடும்.

77
அதிகப்படியான உடல் எடை :

இன்றைய காலத்தில் பலரும் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். உடல் எடை அதிகமாக இருந்தால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே நீங்கள் ஏதாவது ஒரு உடற்பயிற்சி தினமும் செய்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க முயற்சி செய்யுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories