
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளில் மூழ்கிருப்பதால் தங்களை கவனித்துக் கொள்ள கூட சரியாக நேரமில்லை. இதன் நேரடி தாக்கமானது ஆரோக்கியத்தில் தான் விழும். ஆயுள் நீடிக்க நாம் ஆரோக்கியமாக இருப்பது ரொம்பவே முக்கியம். மேலும் நாம் சாப்பிடும் உணவு நல்ல முறையில் செரிமானம் அடைவதும் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே முக்கியம். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், வாழ்விருக்கும் சரியான செரிமானம் மிகவும் அவசியம். நாம் சாப்பிட்ட உணவை உடைத்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு இது கடினமாக உழைக்கின்றது.
இருப்பினும் சில சமயங்களில் செரிமான செயல்முறையானது மெதுவாக அல்லது சங்கடமாக இருக்கும். நாம் சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணமாகாவிட்டால் இதனால் செரிமான அமைப்பு பலவீனமடையும். மேலும் உடல் தொடர்பான பல பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். இத்தகைய சூழ்நிலையில் செரிமானத்தை மேம்படுத்தவும், சாப்பிட்ட உணவு விரைவில் ஜீரணமாக சாப்பிட்ட பிறகு சில விஷயங்களை செய்தால் போதும். அவை உங்களுக்கு சிறந்த செரிமானத்திற்கு உதவும்.
இதையும் படிங்க: அசிடிட்டி, மலச்சிக்கல் நொடியில் தீரணுமா? இந்த '1' டிப்ஸ் போதும்!!
நடைப்பயிற்சி செரிமானத்தை தூண்டுவதற்கு மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும். எனவே நீங்கள் சாப்பிட்ட பிறகு குறுகிய நடைபயிற்சி செய்தால் செரிமான பாதையில் இருக்கும் தசைகளை செயல்படுத்தி வயிறு மற்றும் குடல் வழியாக உணவ இயக்கத்தை ஊக்குவிக்கும். எனவே, சுமார் 10-15 நிமிடங்கள் மற்றும் நடை பயிற்சி செய்தால் போதும். குறுகிய நடைபயிற்சி செய்வதன் மூலம் வயிற்று உப்புசத்தை குறைக்கலாம், செரிமான செயல்முறை மேம்படுத்தலாம் மற்றும் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க உதவும்.
இதையும் படிங்க: இந்த இடத்தில் எண்ணெய் தடவினால் போதும்! செரிமான பிரச்சனைக்கு 30 நாட்களில் தீர்வு!
சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் சூடான நீர் அல்லது ஏதாவது ஒரு மூலிகைக்கு குடிப்பதன் மூலம் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க முடியும். ஏனெனில் சூடான பானங்கள் உணவை உடைக்க உதவுகிறது. இதன் மூலம் சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கலாம். குறிப்பாக இஞ்சி டீ வீக்கம் மற்றும் குமட்டலை போக்க உதவுகின்றது.
சப்ளிமெண்ட்கள்
சில சமயங்களில் உணவை உடைக்க கூடுதல் உதவி தேவை இதற்கு நீங்கள் செரிமானத்திற்கான சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக நீங்கள் வீக்கம் அல்லது அசெளகரியம் அனுபவித்தால் சப்ளிமெண்ட்கள் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் இது கொழுப்புகள், புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகியவற்றை மிகவும் திறமையாக கொடுக்க உதவுகிறது.
உணவுக்குப் பிறகு அன்னாசி பழம், பப்பாளி பழம் போன்ற ஏதாவது ஒரு சிறிய பழத்தை சாப்பிடலாம். ஏனெனில் இதை செரிமானத்தை ஆதரிக்கும். அன்னாசி பழத்தில் இருக்கும் பப்பேன் போன்ற இயற்கை நொதிகள் புரதத்தை உடைத்து, செரிமான செயல்முறை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. மேலும் உணவுக்கு பிறகு ஏதாவது ஒரு பழத்தை சாப்பிட்டால் மலச்சிக்கல் தடுக்கப்படும் மற்றும் குடல் இயக்கங்கள் முழுங்கப்படுத்தப்படும்.
புரோபயாடிக்குகள்
தயிர், போன்றவற்றில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. உணவுக்கு பிறகு புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்ப்பது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். புரோபயாடிக்குகள் குடல் பாக்டீரியாக்களை சமநிலையை ஆதிரிக்கும். இதுதவிர, மலச்சிக்கல், வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சினைகளை தடுக்க உதவுகிறது.
மன அழுத்தம் இருந்தால் மெதுவான செரிமானம் ஏற்படும். எனவே செரிமானத்தை மேம்படுத்த சாப்பிட்ட பிறகு சில நிமிடங்கள் ஆழ்ந்த சுவாசம் அல்லது தியானம் செய்ய வேண்டும். இதனால் மன அழுத்த அளவு குறையும் மற்றும் உங்களது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும். இதனால் விரைவான செரிமான உண்டாகும்.
தூங்காதே!
சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தூங்குவது தான். உணவுக்கு பிறகு தூங்கினால் செரிமான செயல்முறை மெதுவாக்கி, அசெளகரியத்திற்கு வழிவகுக்கும். இதனால் உணவு ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்.