
தற்போது உடல் எடை அதிகரிப்பால் பலரும் அவதிபட்டு வருகிறார்கள். எடை குறைக்க நினைப்பவர்கள் அரிசி உணவு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். காரணம் அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் அது உடல் எடையை அதிகரிக்கும் என்பதால் தான். ஆனால், சிலருக்கோ ஒருவேளை அரிசி சாதம் சாப்பிட முடியாமல் இருக்கவே மாட்டார்கள். மேலும் அவர்கள் எடையை குறைக்கவும் நினைப்பார்கள். இப்படிப்பட்டவர்களின் மனதில் தோன்றும் முதல் கேள்வி என்னவென்றால், அரிசி சாதம் சாப்பிடுவதன் மூலம் எடையை குறைக்க முடியாதா? என்றுதான். ஆனால் அரிசியில் சில வகைகள் உள்ளன அவை உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில அரிசிகளை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த அரிசியில் அதிகளவு வைட்டமின் பி, நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உள்ளது. இதில் இருக்கும் நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதால் பசி எடுக்காது. இதனால் நாம் அதிகமாக சாப்பிட மாட்டோம். மேலும் பிரவுன் அரிசியில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ளதால், இது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
பாஸ்மதி அரிசியில் கிளைசெமிக் குறியீடு குறைவாகவோ உள்ளது. எனவே இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும். அதுவும் குறிப்பாக இந்த அரிசியை நீங்கள் எண்ணெய் அல்லது நெய் இல்லாமல் சமைக்கும் போது எடையை சுலபமாக குறைக்கலாம்.
இதையும் படிங்க: தினமும் வெறும் வயித்துல வெள்ளை பூசணி ஜூஸ்.. ஒரே மாசத்துல '5' கிலோ குறைவீங்க!
கருப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த அரிசி திருப்தியை அதிகரிக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எடையைக் கட்டுப்படுத்துவதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்கும். இந்த அரிசியில் கலோரிகள் குறைவாக உள்ளதால் எடை இழப்புக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
இதையும் படிங்க: இந்த '5' காய்கறிகள் போதும்.. சர்னு உடல் எடையை குறைக்கலாம்!!
கேரள சிவப்பு என்று அழைக்கப்படும் இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. இது எடை இழப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த அரிசியில் இருக்கும் நார்ச்சத்து உங்களது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வை தரும் மற்றும் செரிமானத்திற்கும் உதவும். இந்த அரிசியில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றுகள் நிறைந்துள்ளதால் அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் மற்றும் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
சாமை அரிசி பசையம் இல்லாத தானியம். இந்த அரிசியில் நார்ச்சத்து அதிகளவு உள்ளதால் இது எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. இந்த அரிசி சாப்பிட்டால் விரைவில் பசி எடுக்காது. இதனால் எடையை சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம் அல்லது குறைக்கலாம். இந்த அரிசியில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இது உடலில் ஊட்டச்சத்து சமநிலையை பராமரிக்கும் அதே வெளியே குறைக்கும் நோக்கத்திலும் உதவும்.