Smelly armpits: வியர்வை நாற்றம் குடலை புடுங்குதா? இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்கள்!

First Published | Jan 11, 2023, 5:50 PM IST

 Smelly armpits: நாற்றத்தில் இருந்து விடுதலை பெற இந்த டிப்ஸை பின்பற்றுங்கள். 

குளிர் காலத்தில் தினமும் குளிப்பதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை. இதன் காரணமாக வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு அலுவலகத்திற்கும் வெளியிலும் கிளம்பி விடுகின்றனர். இதனால் நமக்கு சிக்கல் இருக்கிறதோ? நம் அருகில் இருப்பவர்கள் பாவம். சிலர் நாள்தோறும் குளித்தால் கூட அவர்கள் மீது வியர்வை துர்நாற்றம் அதிகமாக வீசும். 

நமது உடலில் உள்ள சுரப்பிகளில் இருந்து வெளியேறுவதை வியர்வை நாற்றம். நம் தோலில் எக்ரைன், அபோக்ரைன் ஆகிய இரு வியர்வைச் சுரப்பிகள் இருக்கும். நம்முடைய முகம், கை, கால், மார்பு ஆகிய இடங்களில்தான் எக்ரைன் சுரப்பி உள்ளது. மற்றொரு சுரப்பியான அபோக்ரைன் அக்குள், மார்பு, பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் உள்ளது. இந்த சுரப்பி மட்டும் சுரப்பி பருவ வயதிற்கு பின்னே சுரக்கும். அதனால்தான் குழந்தைகள் மீது வியர்வை துர்நாற்றம் வீசுவதில்லை.  

Latest Videos


வியர்வை வர காரணம்? 

நம் உடலில் உள்ள கொழுப்பு, புரதங்களுடன் தீமை செய்யும் பாக்டீரியாக்கள் சேர்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனை இயற்கை வழிமுறைகளில் குறைக்கலாம். 

தக்காளி குளியல்! 

நாம் குளிக்க எடுத்து வைத்துள்ள தண்ணீரில் தக்காளியை பிழிந்து விட்டு குளித்தால் வியர்வை நாற்றம் பறந்து போகும். இதை காலை, மாலை இருமுறையும் பின்பற்றலாம். 

மஞ்சள் மகிமை! 

தினமும் குளிக்கும் போது மஞ்சள் கிழங்கை உரசி உடலில் தேய்த்து குளித்து வந்தால் வியர்வை துர்நாற்றம் வீசாது.

இதையும் படிங்க; Honey for skin: பொங்கல் அன்று பொலிவான சருமம் வேண்டுமா? ஒரு தக்காளியும் தேனும் போதும் இதை ட்ரை பண்ணுங்க!

புதினா மசாஜ்! 

நமக்கு வியர்வை துர்நாற்றம் அக்குளில் இருந்து அதிகம் வெளிவர வாய்ப்புள்ளது. ஆகவே புதினாவை ஊற வைத்து அக்குளில் தடவி மசாஜ் செய்யுங்கள். அதன் பிறகு குளித்தால் புத்துணர்வுதான் இருக்கும். நாற்றம் அறவே இருக்காது. 

தயிரால் துர்நாற்றம் நீங்கும்! 

வீட்டில் உள்ள பசுந்தயிரை எடுத்து அக்குள் மற்றும் உடல் முழுவதும் பூசி குளியுங்கள். துன்புறுத்தும் வியர்வை துர்நாற்றம் நீங்கி சருமமும் ஈரப்பதமாக இருக்கும். 

இதையும் படிங்க; Relationship tips: நீங்க பண்ணுறது உண்மையான காதலா? முதலில் இதை தெரிந்து கொள்ளுங்கள்...!

click me!