உடற்பயிற்சிக்குப் பின் அசிடிட்டி பிரச்சனை ஏற்படுகிறதா?...குறைக்க வழிகள் என்ன?

First Published | Apr 26, 2023, 7:38 PM IST

உடற்பயிற்சிக்கு பின் சிலருக்கு அசிடிட்டி பிரச்சனை வரும். சில எளிய குறிப்புகள் மூலம் இதனை தீர்க்கலாம்.

பொதுவாக உடற்பயிற்சிக்கு பின் சிலருக்கு அசிடிட்டி பிரச்சனை ஏற்படுகிறது. தீவிரமான அல்லது உடலுக்கு எரிச்சலூட்டும் உடற்பயிற்சி வயிற்று அமிலத்தை உணவுக்குழாயை நோக்கி நகர்த்துகிறது. இது நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும். அசிடிட்டி அல்லது ஆசிட் ரிஃப்ளக்ஸ் என்பது உடற்பயிற்சிக்குப் பிறகு சிலருக்கு பொதுவான பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் உடற்பயிற்சிக்கு முன் அதிகமாக சாப்பிடுவதால் இப்பிரச்சினை வரக்கூடும். எனவே இப்பிரச்சனையை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

acidity

உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடுவதை தவிர்க்கவும்:

உடற்பயிற்சி செய்வதற்கு முன் லேசான உணவு அல்லது சிற்றுண்டியை மட்டும் சாப்பிடுங்கள். ஏனெனில் அவை உங்கள் வயிற்றை இலகுவாக வைத்திருக்க உதவுகின்றன. உடற்பயிற்சியைத் தொடங்குவதற்கு முன் குறைந்தது 30 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். 

Latest Videos


நீரேற்றமாக இருக்கவும்:

உடற்பயிற்சி செய்வதற்கு முன், மற்றும் பிறகு நிறைய தண்ணீர் குடிப்பது நல்லது. ஏனெனில் ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையை தடுக்க தண்ணீர் உதவுகிறது. நீரிழப்பு அமில ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளை அதிகரிக்கும். எனவே 
உடற்பயிற்சிக்கு முன் மற்றும் பின் அதிகளவுதண்ணீர் மற்றும் உடலுக்கு ஊக்கம் தரும் பானங்கள் போன்றவற்றை குடிப்பது நல்லது.
 

உடனே படுக்கைக்குச் செல்ல வேண்டாம்:

உடற்பயிற்சி முடிந்த உடனே தூங்குவதை நிறுத்துங்கள். இப்படி செய்தால் நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளெக்ஸ் போன்ற பிரச்சனைகள் வரும். எனவே உடற்பயிற்சி செய்த பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் கழித்து தூங்குங்கள். 

இதையும் படிங்க: நடிகர் சரத்பாபுக்கு செப்சிஸ் பாதிப்பு.. இந்த நோயின் அறிகுறிகள் என்னென்ன? செப்சிஸ் வந்தால் என்னாகும் தெரியுமா?

அமில எதிர்ப்பு மருந்து:

ஓவர்-தி-கவுன்டர் (Over-the-counter) ஆன்டாக்சிட்கள் அமில ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளைப் போக்க உதவும். உங்களுக்கு நாள்பட்ட ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனை இருந்தால் கண்டிப்பாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக இதனை உட்கொள்ளும் போது உங்கள் வாழ்க்கை முறை பழக்கத்தை கண்டிப்பாக மாற்ற வேண்டும்

சமையல் சோடா:

பேக்கிங் சோடா அமில ரிஃப்ளக்ஸ் பிரச்சனையையும் குறைக்கிறது. இது பேக்கிங் சோடா உங்கள் உடலில் உப்பு உட்கொள்ளலை அதிகரிக்கிறது. அதனால்தான் அதை பயன்படுத்தும்  முன் மருத்துவரை அணுகுவது நல்லது.

click me!