60 வயதுக்கு பின் பெண்கள் 'எத்தனை' காலடிகள் வாக்கிங் போகனும்? இதோ அறிவியல் உண்மை!! 

Published : Feb 28, 2025, 08:34 AM IST

Daily Step Count For Women Over 60 : 60 வயதைக் கடந்த பெண்கள் எத்தனை காலடிகள் நடைபயிற்சி செய்வது அவர்களின் ஆரோக்கியத்திற்கு கூடுதலாம உதவும் என்பதை இங்கு காணலாம். 

PREV
15
60 வயதுக்கு பின் பெண்கள் 'எத்தனை' காலடிகள் வாக்கிங் போகனும்? இதோ அறிவியல் உண்மை!! 
60 வயதுக்கு பின் பெண்கள் 'எத்தனை' காலடிகள் வாக்கிங் போகனும்? இதோ அறிவியல் உண்மை!!

நடை பயிற்சி எந்த உபகரணங்களும் இல்லாமல் செய்யக்கூடிய எளிமையான உடற்பயிற்சியாகும். சிறு வயதினர் முதல் வயதானவர்கள் வரை இந்த பயிற்சியை அனைத்து தரப்பினரும் செய்யலாம். நடைபயிற்சி செய்வது வயதான காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நடத்துவதற்கும், சுறுசுறுப்பாக இருப்பதற்கும் உதவியாக இருக்கும். முதியோர் நடைபயிற்சி செய்யும் போது என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும், 60 வயதிற்கு பின் பெண்கள் எத்தனை காலடிகள் நடப்பது அவர்களுக்கு நன்மை பயக்கும் என்பது குறித்த பல தகவல்களை இந்த பதிவில் காணலாம். 

25
எவ்வளவு காலடிகள்?

இதுவரை செய்யப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் 10 ஆயிரம் காலடிகள் நடப்பது உடல் நலத்திற்கு அசாத்தியமான நன்மைகளை தரும் என சொல்லப்படுகிறது.  ஆனால் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 ஆயிரம் காலடிகள்  நடக்க வேண்டும் என்பது சற்று கடினம். ஆகவே அந்த இலக்கை அடையை தங்களை கடினப்படுத்தி கொள்ள தேவையில்லை.  அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், அதிலும் 6ப் வயதுக்கு மேல் பெண்கள் எவ்வளவு காலடிகள் நடக்க வேண்டும் என்பது குறித்து தெளிவுபடுத்துகிறது. 

இதையும் படிங்க:  வயதானவங்க'எவ்வளவு' நேரம் நடக்கலாம்? 45 வயசுக்கு மேல வாக்கிங் போனா இப்படி 1 நன்மை இருக்கு
 

35
சாப்பிட்ட பின் குறுநடை

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எப்போதுமே சாப்பிட்ட பின்னர் 10 முதல் 15 நிமிடங்கள் மெதுவாக நடைபயிற்சி செய்வது நல்லது. இது அவர்களுடைய செரிமானம் மேம்பட உதவுகிறது.  இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருகிறது. மன ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இருக்க நடைபயிற்சி உதவும். நீங்கள் எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள் என்பதைவிட உங்களுடைய தோரணை எப்படி இருக்கிறது என்பது கவனிக்கக்கூடியது. அதனால் நிமிர்ந்த தோற்றத்தில் கைகளை வீசி நடங்கள். நல்ல காலணிகள் நடைபயிற்சிக்கு அடிப்படையானது. சரியான அளவில் தண்ணீர் அருந்துங்கள். 

இதையும் படிங்க:   வாக்கிங் போகாமல் வெறும் '15' நிமிடங்கள் இதை செய்தால்  எடை தானாக குறையும்!!

45
60 வயதிற்குப் பின் நடக்க வேண்டிய காலடிகள்?

ஒட்டுமொத்த உடலுக்கும் நடைபயிற்சி சிறந்த தேர்வு. மனச்சோர்வை நீக்கி மனநிலையை மேம்படுத்தும். வயதானவர்களுக்கு ஏற்படும் சோர்வு, தனிமை, சுணக்கம் அனைத்தையும் நீக்கி மன ஆரோக்கியம், சுறுசுறுப்பு, மூட்டுகள் வலிமையை தரக் கூடியது நடைபயிற்சி. இதய ஆரோக்கியம் மேம்பட,  கெட்ட கொழுப்புகள் குறைய வாக்கிங் உதவுகிறது.  தினமும் நடப்பதால் தூக்கமின்மை கோளாறு நீங்கி நன்கு தூக்கம் வரும்.  ஆய்வுகளின்படி ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் மிதமான உடல் செயல்பாடுகள் கொண்டிருக்கும் பெண்களின் இரத்த ஓட்ட அமைப்பு நோய்க்கான ஆபத்து 12% குறைவாகவே இருக்குகிறது.  குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் எளிய உடற்பயிற்சி செய்த பெண்கள் 16% குறைவான ஆபத்துகளை கொண்டிருந்தனர். ஆகவே 60 வயதுக்கு மேல் பெண்கள் ஒரு நாளில் 3,600 காலடிகள் நடப்பது நன்மை பயக்கும்.  இதை பின்பற்றினால் இதய செயலிழப்பு வரும் வாய்ப்பு குறைவு.  

55
பின்னோக்கி நடத்தல்:

சாதாரண நடைபயிற்சியை தவிர பின்னோக்கி நடப்பது வயதானவர்களுக்கு கூடுதல் நன்மை தரும். இதனால் உடலில் தடுமாற்றம் குறைந்து சமநிலையும் ஒருங்கிணைப்பும் கிடைக்கும். வயதானவர்கள் உடற்பயிற்சி செய்யும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. அதிலும் அதிக எடையுள்ளவர்கள், ரொம்ப நாள் உடற்செயல்பாட்டில் ஈடுபடாதவர்கள் நிபுணர்களின் வழிகாட்டுதல் பெற்று கவனமாக செயல்படவேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories