பொதுவாகவே, இஞ்சி நமது சமையலறையில் ஒரு முக்கிய அங்கம்.. அதன் உதவியுடன் பல வகையான உணவுகளின் சுவையை அதிகரிக்கலாம். ஆனால் இது எந்த ஆயுர்வேத மருந்துக்கும் குறைந்ததல்ல. பச்சையாக மென்று சாப்பிடலாம்.. இஞ்சி சாறு அருந்தலாம்.. வழக்கமான தேநீரில் அல்லது மூலிகை டீயுடன் சேர்த்து சாப்பிடலாம்.. இது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இஞ்சியில் உள்ள 'ஜிஞ்சரால்' என்ற கலவை மிகவும் நன்மை பயக்கும். இதுதவிர, இதில் வைட்டமின் பி3, வைட்டமின் பி6, வைட்டமின் சி, இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஜிங்க், ஃபோலேட் போன்ற சத்துக்கள் உள்ளன.
இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்:
செரிமானத்தை மேம்படுத்துகிறது - நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது: இஞ்சியில் உள்ள என்சைம்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றன, இதன் காரணமாக உங்கள் வயிறு சரியாக செயல்படுகிறது. இது வாயு, மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது. இஞ்சி வைட்டமின் சியின் நல்ல மூலமாகும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், இது நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிக்கிறது.
எடை குறைப்பு - சளி, இருமல் தடுக்கிறது: இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொழுப்பைக் கரைப்பதால், எடையைக் குறைக்க உதவுகிறது. இஞ்சி வெப்பத்தை உருவாக்குகிறது, எனவே சளி மற்றும் இருமலை தடுக்க உதவுகிறது.
நீரிழிவு நோய் - மூட்டுவலி நோயாளிகளுக்கு நல்லது: இஞ்சியை உட்கொள்வது நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுவலி நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
இதையும் படிங்க: இஞ்சி - சுக்கு: எதில் ஆரோக்கியம் உள்ளது..??
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது - சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது: இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இயற்கையான டையூரிடிக்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. இதனால் சருமத்தின் அழகு கூடுகிறது.