எந்த வயதில் குழந்தைகளுக்கு காபி, டீ கொடுக்கலாம்?
காலையில எழுந்தவுடனே சூடா ஒரு டீ குடிச்சா வர சந்தோஷமே தனி. அதுக்காகவே.. நிறைய பேரு தங்களோட நாளை டீ, காபியில இருந்தே ஆரம்பிக்கிறாங்க. பெரியவங்க டீ, காபி குடிக்கிறது ரொம்ப சாதாரண விஷயம்தான். ஆனா... குழந்தைகளளுக்கு? அவங்களுக்கு டீ, காபி பழக்கப்படுத்தலாமா? பழக்கப்படுத்தினாலும்.. எந்த வயசுல இருந்து அவங்களுக்கு டீ, காபி கொடுக்க ஆரம்பிக்கணும்..? இதைப் பத்தி நிபுணர்கள் என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க...
எந்த வயது சிறந்தது
நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தைகளுக்கு காபி, டீ கொடுக்கணும்னா, குறைந்தபட்சம் அவங்களுக்கு 14 வயசு ஆகியிருக்கணும். அதுக்கு குறைவான வயசு உள்ள குழந்தைகளுக்கு டீ, காபி தவறுதலா கூட கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுக்கறதுனால அவங்களோட வளர்ச்சியை தடுக்குது. இதனால குழந்தைகளுக்கு நிறைய பாதிப்பு வருது. நீங்க உங்க குழந்தைகளுக்கு டீ, காபி கொடுத்துட்டு இருந்தீங்கன்னா, உடனே நிறுத்திடறது நல்லது.
மூளையை தூண்டும் காபி
உண்மையிலேயே காபில இருக்கற காபின், மூளையைத் தூண்டி இதயத் துடிப்பை அதிகரிக்குது. அதே மாதிரி, இது வயிற்றுப் புண், வயிற்று வலி, கவனச் சிதறல் பிரச்சனைகள் மாதிரியான பிரச்சனைகளை உருவாக்குது. இதனால குழந்தைகளோட தூக்கம் கெட்டுப் போகுது. குழந்தைகளோட தூக்கம் கெடும்போது, அவங்களோட உடல் வளர்ச்சி தானாகவே குறைஞ்சுடும்.
டீ கொடுக்கலாமா
குழந்தைகளுக்கு டீ இல்லன்னா காபி ஏன் கொடுக்கக் கூடாது?
டீயில டானின் இருக்கு. இது குழந்தைகளோட பற்கள், எலும்புகளை வலுவாக்குது. சில குழந்தைகள் டீ குடிக்கறதுக்கு அடிமையாயிடுவாங்க, இது அவங்களுக்கு ஆபத்தானது. டீ காபில இருக்கற டானின்கள், காபின் குழந்தைகளோட மன, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்குது.
சர்க்கரை அளவு: டீ , காபில காஃபினோட சேர்த்து அதிகப்படியான சர்க்கரை இருக்கு. இது குழந்தைகளுக்குக் கெடுதல். அவசியம்னா 14 வயசுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு கப் சின்ன அளவுல கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு காய்ச்சல்
குழந்தைக்கு காய்ச்சல் இருந்தா, நீங்க ஒரு இஞ்சி துண்டு , ரெண்டு இல்லன்னா மூணு ஏலக்காயோட டீ போட்டுக் கொடுக்கலாம். இது அவங்க விரைவில் குணமடைய உதவும்.
வாந்தி: குழந்தைகளுக்கு வாந்தி வருவது சாதாரணம். ஏன்னா அவங்களோட நோய் எதிர்ப்பு சக்தி வளர்ந்துட்டு இருக்கும். வீக்கம் , வாந்தியை நிறுத்த மூலிகை டீ கொடுக்கலாம்.