திடீரென்று உடல் எடை கூடுகிறதா? சந்தேகமே வேண்டாம் உங்களுக்கு இந்த பிரச்சனைகள் இருக்க வாய்ப்பு!

First Published Jan 31, 2023, 12:42 PM IST

சில உடல் நல பிரச்சனைகள் ஏற்படும்போது நமது உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

நம்மில் பலருக்கு சில நேரங்களில் உடல் எடை அதிகரிப்பு, எடை இழப்பு மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக, உடல் எடையை குறைவதை விடவும் எடை அதிகரிப்புதான் தற்போது அதிகமாக உள்ளது. காலத்தின் சுழற்சியில் மெதுவாக எடை அதிகரிப்பது இயல்பானது. ஆனால், எந்த ஒரு காரணமும் இல்லாமல், குறுகிய காலத்தில் உடல் எடை விரைவாக அதிகரிப்பது நல்ல விஷயமல்ல என்கின்றனர் நிபுணர்கள். இது அடிப்படை உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கும் வாய்ப்புள்ளது. அதற்கான காரணங்களை இங்கு காணலாம்.

இரவில் 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களின் உடலில் அதிக கொழுப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் இரவில் 8 மணி நேரம் உறங்கினாலே, ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைந்துவிடும். எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கும். தூக்கமின்மையால் நமது உடலில் கார்டிசோல், இன்சுலின் ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாகும். இது எடையை கூட்டுகிறது. இது உங்கள் பசியை அதிகரிக்கும். அதனால் தேவைக்கு அதிகமாக சாப்பிடும் வாய்ப்பு உண்டாகிறது. கொழுப்பு, சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட விருப்பம் ஏற்படும். எடை அதிகரிக்காமல் இருக்க சீரான உறக்கம் கொள்ளுங்கள். 

சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காரணமாக அவ்வப்போது எடை அதிகரிக்கும். மாதவிடாய் காலங்களில் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் சுரப்பு அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் எடை அதிகரிக்க வழிவகுக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி அதிகரிக்கும் எடை அளவில் குறைவு. மாதவிடாய் காலம் முடிந்த பிறகு, அந்த அதிகரித்த எடையும்்்் se குறைகிறது. இப்படியான எடை அதிகரிப்பு மாதவிடாய் தொடங்கிய அடுத்த மாதத்திலும், சில சமயங்களில் அண்டவிடுப்பின் போதும் கூட ஏற்படும். ஆனால் மாதவிடாய்க்கு பிறகு இயல்பு நிலை திரும்பும். 

உடல் எடை அதிகரிப்பதைத் தவிர, சோர்வு, வறண்ட சருமம் அல்லது முடி உதிர்தல் ஆகிய பிற மாற்றங்களை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இவை எல்லாமே ஹைப்போ தைராய்டிசத்தின் அறிகுறிகள் தான். ஹைப்போ தைராய்டிசம் என்றால் நமது தொண்டையில் உள்ள தைராய்டு சுரப்பி போதுமான தைராய்டு ஹார்மோன்களை சுரக்க முடியாத ஒரு நிலை. இந்த தைராய்டு சுரப்பிதான் உடலின் பல செயல்பாடுகளை கட்டுப்படுத்தும். அது சரியாக வேலை செய்யாதபோது, ​​அதன் அறிகுறிகள் உங்கள் உடல் முழுவதும் தோன்றும். அதில் எடை அதிகரிப்பு குறிப்பிடத்தகந்த அறிகுறி. 

 அழுத்தமில்லாத வாழ்வை அனுபவிப்பவர்கள் மிகவும் சொற்பமாகிவிட்டார்கள். வேலை பளு, வருமான பற்றாக்குறை, பணப் பிரச்சனை ஆகிய காரணங்களால் பலர் மன அழுத்தத்தில் உள்ளனர். இந்த மன அழுத்தத்தால், நம் உடல் கார்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் பசியை அதிகரிக்கும். மன அழுத்தத்தின் போதும் மக்கள் அதிக கலோரி கொண்ட உணவுகளை சாப்பிட விரும்புகிறார்கள் என ஆய்வுகளும் கூறுகின்றன. இதனாலும் எடை அதிகரிக்கலாம். 

நீரிழிவு நோயின் வகையைப் பொறுத்து, உணவு, உடற்பயிற்சி, மருந்துகளால் அந்நோயைக் கட்டுப்படுத்தலாம். நம் உடலில் சுரக்கும் இன்சுலின் நமது உடலின் ஆற்றலைச் சேமிப்பதை எளிதாக்குகிறது. இது பெரும்பாலும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவுகளை உண்ணும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், அந்த நோயைக் கட்டுப்படுத்த மருத்துவர்களின் ஆலோசனை பெற்று நலம் வாழலாம். 

click me!