வெள்ளை பூசணி ஜூஸ் நன்மைகள் தெரியுமா? தினமும் காலைல குடித்தால் அற்புத மாற்றங்கள்

Published : Jun 21, 2025, 08:48 AM IST

தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14

பொதுவாக பெரும்பாலானோர் தினமும் காலை எழுந்தவுடன் டீ, காபி தான் குடிக்க விரும்புவார்கள். ஆனால் அவை ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். ஆகவே அவற்றிற்கு பதிலாக நீங்கள் தினமும் வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால் பல அற்புத நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? ஏனெனில் அவற்றில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. சரி இப்போது வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

24

வெள்ளை பூசணி ஜூஸ் ஆரோக்கியத்திற்கு பலவிதமான நன்மைகளை வாரி வழங்கும். ஏனெனில் இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நீர்ச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி, வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளன.

தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால் நாள் முழுவதும் மனநிலையை சிறப்பாக இருக்க வைக்கும். காரணம், அவற்றில் இருக்கும் சத்துக்கள் நரம்பு மற்றும் மூளையை அமைதியாக வைத்து மன அழுத்தம், மன இறுக்கத்தை குறைக்கும்.

34

இதுதவிர, சிறுநீரக தொற்று, சிறுநீருடன் ரத்தம் வெளியேறுவது, அல்சரினால் ஏற்படும் ரத்தக் கசிவு, பைல்ஸ் போன்ற பிரச்சினைகளுக்கு வெள்ளை பூசணி ஜூஸ் சிறந்த பானம் ஆகும்.

அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி உடனடி நிவாரணம் தரும். அதுபோல தினமும் காலையில் வெள்ளைப் பூசணி ஜூஸில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள குழுக்கள் வெளியேற்றப்படும் மற்றும் வயிற்று தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்படும்.

44

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால் எடை குறைவதோடு மட்டுமல்லாமல் உடலில் இருக்கும் கெட்ட நீர் வெளியேற்றப்படும். அதுமட்டுமின்றி உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் வெள்ளை பூசணி ஜூஸ் குடிக்கலாம். இது உடல் சூட்டை தணிக்கும் மற்றும் உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும்.

நீங்கள் தினமும் காலை மற்றும் மாலை என இரு வேளையிலும் வெள்ளைப் பூசணி ஜூஸில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் இருக்கும் ரத்தம் சுத்தமாகும். அதுமட்டுமின்றி உடலில் ஏதேனும் உறுப்புகள் பாதிக்கப்பட்டு அதன் காரணமாக கசிவு ஏற்பட்டால் வெள்ளை பூசணி ஜூஸ் குடியுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories