கஷ்டப்படாம சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டணுமா? அப்ப தினமும் இந்த விதைய கொஞ்சம் வாயில போடுங்க! நம்ப முடியாத பலன்கள்

First Published | Jun 2, 2023, 4:34 PM IST

கருஞ்சீரகத்தை எவ்வாறு சாப்பிட்டால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், கல்லீரல் நோய் என எல்லா பிரச்சினைகளையும் நிரந்தரமாக விரட்டி அடிக்கும் ஆற்றல் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 

நம் வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய மூலிகை பொருள்களில் மிக முக்கியமானது கருஞ்சீரகம். கலோஞ்சி என அழைக்கப்படும் கருஞ்சீரகம் நம் உடலில் உள்ள பல்வேறு நோய்களை எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நீக்கும் வல்லமை கொண்டது. கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து பயன்படுத்தலாம். சமைக்கும்போது இந்த பொடியை மழைச்சாரல் போல கொஞ்சம் தூவி விட்டால் உடலுக்கு ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும். இதுவரை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும் இனி நீங்கள் சமைக்கும்போது தினமும் கருஞ்சீரகப் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். 

கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு!! 

நம் உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க கருஞ்சீரகம் உதவியாக இருக்கும். இதில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் நன்கு செயல்படுகிறது. கருஞ்சீரகப் பொடியை விட கருஞ்சீரக எண்ணெய் நல்ல பலனளிக்கும். நம்முடைய உணவில் தினமும் கருஞ்சீரக எண்ணெய் அல்லது பொடியை சேர்ப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். 

Tap to resize

புற்றுநோயை எதிர்க்கும்!! 

கணையத்தில் ஏற்படும் கொடூரமான புற்றுநோயை கூட குணப்படுத்துவதில் கருஞ்சீரகம் முக்கிய பங்காற்றுகிறது. கருஞ்சீரகப் பொடி அல்லது கருஞ்சீரக எண்ணையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது கணையத்தில் உள்ள புற்று செல்களை அழிக்க முடியும். இந்த புற்றுநோய் மட்டுமல்லாமல் பிற புற்றுநோயையும் கட்டுக்குள் வைக்க கருஞ்சீரகம் உதவும். 

சர்க்கரை நோய் 

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் கருஞ்சீரகத்தை தினமும் சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். அது மட்டுமில்லாமல் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால் சர்க்கரை நோயையும் கட்டுப்படுத்த முடியும். கருஞ்சீரகப் பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். செரிமான கோளாறு உள்ளிட்ட பிற வயிற்று பிரச்சனைகளும் குணமாகும். உள்ளுறுப்புகளில் மிகவும் முக்கியமான கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த கருஞ்சீரகம் நமக்கு உதவும். ஆகவே தினமும் கருஞ்சீரகத்தைச் சாப்பிட்டு வாருங்கள். 

உடல் பருமன் 

உடல் எடை அதிகமாக இருந்தால் பல்வேறு நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. நம் உடலில் இருக்கும் அதிகப்படியான எடையை குறைக்க கருஞ்சீரகம் உதவுகிறது. எடையை குறைக்க நினைப்பவர்கள் கருஞ்சீரகத்தை நன்கு வறுத்து பொடி செய்து தினமும் காலையில் ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட வேண்டும். இதை நேரடியாகவும் உண்ணலாம்; நீரில் கலந்தும் குடிக்கலாம். இப்படி செய்தால் விரைவில் பல கிலோ எடையை குறைக்க முடியும். 

Latest Videos

click me!