உங்கள் கண்கள் அடிக்கடி துடிக்குதா? ஏன் என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க...!!

First Published Jun 2, 2023, 2:24 PM IST

இப்பதிவில் நாம் கண் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிந்து கொண்டு, கண்கள் துடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

ஒரு சிலருக்கு மட்டுமே கண் அடிக்கடி துடிக்கும். அந்த வகையில் நம்முடைய சமுதாயத்தில் கண் துடிப்பதில் ஒரு மூட நம்பிக்கை உள்ளது. அதாவது ஆண்களுக்கு வலது கண்ணும், பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது நடக்கும். அது போல பெண்களுக்கு வலது கண்ணும், ஆண்களுக்கு இடது கண்ணும் துடித்தால் கெட்டது நடக்கும் என்ற மூடநம்பிக்கை மக்கள் மனதில் உள்ளது. ஆனால் உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமாகும். பலர் இதை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் இவ்வாறு கண்கள் துடிப்பதற்கு, உடலில் ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். 

இவ்வாறு கண் துடிப்பதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் பல காரணங்கள் உள்ளன. சிலருக்கு கண் துடிப்பது வாரம் அல்லது மாதம் கூட நீடிக்கலாம். இப்பதிவில் நாம் கண் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிந்து கொண்டு, கண்கள் துடித்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..

கண் துடிக்க என்ன காரணம்?

மன அழுத்தம்:

மன அழுத்தம், கண் துடிப்பதற்கு மிகவும் பொதுவான காரணமாக இருக்கலாம். யோகா, சுவாசப் பயிற்சிகள், நண்பர்கள் அல்லது செல்லப்பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடுதல் ஆகியவை உங்கள் கண் இமை துடிப்பதை ஏற்படுத்தக்கூடிய மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளாகும்.

சோர்வு:

தூக்கமின்மை, மன அழுத்தம் காரணமாகவோ அல்லது வேறு சில காரணங்களினாலோ, கண்ணிமை துடிப்பது தூண்டும். இதற்கு நாள் ஒன்றுக்கு 6-8 மணிநேரம் தொடர்ந்து தூங்குவது மிகவும் உதவியாக இருக்கும்.
 

கண் சிரமம்:
நீங்கள் உங்கள் கண்களுக்கு அதிகப்படியான சிரமம் கொடுத்தாலும் உங்கள் கண்கள் துடிக்க ஆரம்பித்துவிடும். உதாரணத்திற்கு, கண்களுக்கு இடைவேளை கொடுக்காமல் தொடர்ந்து படிப்பது, கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடும் கண் இமைகள் துடிக்க ஒரு பொதுவான காரணமாகும். ஆகையால் கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகியவை பயன்படுத்தும் போது அவற்றிற்கான கண்ணாடியை அணிந்து கொண்டு பயன்படுத்தினால் உங்கள் கண்கள் துடிக்காது.

காஃபின்:

அதிகப்படியான காஃபின் கண் துடிப்பதைத் தூண்டும். காபி, டீ,  சாக்லேட் மற்றும் குளிர்பானங்களை உட்கொள்வதை ஓரிரு வாரங்களுக்கு குறைத்து, உங்கள் கண் துடிப்பு மறைந்துவிட்டதா என்று பார்க்கவும்.

eye health

மது
பீர், ஒயின் அல்லது மது அருந்திய பிறகு உங்களுக்கு கண் துடிப்பு ஏற்பட்டால், சிறிது நேரம் மது அருந்தாமல் இருங்கள், உங்கள் கண் துடிப்பது நின்றுவிடும்.

இதையும் படிங்க: பெண்கள் வயதான ஆண்களுடன் உறவு வச்சிக்க இந்த ஒரு விஷயம் தான் காரணமாம்..!! அட!! இப்படியுமா இருக்கும்!!

கண்கள் வறட்சி:

கண் வறட்சியினால் கண்கள் துடிக்க ஆரம்பித்து விடும். மேலும்  சரியாக தண்ணீர் குடிக்காமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் செலவிடுவது, காஃன் உணவுப்பொருட்களை அதிக உட்கொள்வது, மனசோர்வு போன்றவற்றால் கண்கள் சீக்கிரம் வறண்டுவிடுகிறது. பொதுவாக 
பெரியவர்களுக்கு தான் கண் வறட்சியாக இருக்கும். இதனால் தான் அவர்களுக்கு கண் அடிக்கடி துடிக்கும்.
 

ஊட்டச்சத்து பிரச்சனைகள்:

சில ஆய்வில், ஊட்டச்சத்து பிரச்சனை இருந்தால் கண் இமைகள் துடிக்கும் என்று கூறப்படுகிறது. அதிலும்  மெக்னீசியம் போன்ற சில ஊட்டச்சத்துப் பொருட்களின் பற்றாக்குறை கண் துடிப்பை தூண்டும் என்று கூறுகின்றது. எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சரியான முறையில் உட்கொண்டால் கண் துடிப்பை தவிர்க்கலாம்.
 

ஒவ்வாமை:
ஒரு சிலருக்கு கண்களில் அலர்ஜி ஏற்படும். அரிப்பு, வீக்கம் மற்றும் கண்களில் நீர் வடிதல், கண்களைத் தேய்க்கும் போது இது ஹிஸ்டமைனை மூடி திசுக்களில் வெளியிடுகிறது மற்றும் கண்ணீரை வெளியிடுகிறது, இது கண் இமை துடிக்கத் தூண்டுகிறது. ஆகவே உங்கள் கண்ணில் அலர்ஜி இருந்தால், உடனே மருத்துவர் அணுகவும் அவ்வாறு செய்வது இவ்வாறு செய்வதன் மூலம் கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்

click me!