நீங்க அடிக்கடி பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணீர் குடிக்கிறீங்களா? அதனால் வர்ற பாதிப்பு தெரியுமா? ரொம்ப டேஞ்சர்!!

First Published Jun 2, 2023, 1:04 PM IST

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்பதால் உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

கோடைகால வெப்பம் காரணமாக உடல் நீர்ச்சத்தை இழக்கிறது. உடல் எப்போதும் நீரேற்றமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆகவே வெப்ப காலத்தில் பெரும்பாலானோர் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கையில் தண்ணீர் எடுத்து செல்கின்றனர். சிலர் சில்வர், செம்பு போன்ற பாட்டில்களை பயன்படுத்தினாலும், பெரும்பாலானோர் பிளாஸ்டிக் பாட்டில்களிலே தண்ணீர் எடுத்து செல்கின்றனர். இந்நிலையில் பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீரை கொண்டு செல்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET - Polyethylene Terephthalate) என்னும் வேதிப்பொருளை வைத்து தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வேதிப்பொருளில் பிஸ்பீனால் (Bisphenol) மாதிரியான உடலுக்கு கெடுதல் செய்யும் வேதிப்பொருள்களும் உள்ளன. இவை நாம் குடிக்கும் தண்ணீரில் கலந்தால் ஹார்மோன் சமநிலையின்மை, குழந்தை உண்டாவதில் சிக்கல்கள், புற்றுநோய் போன்ற பல உடல்நல கோளாறுகள் வரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். 

பிளாஸ்டிக் பாட்டிலில் உள்ள PET என்பது ஆன்டிமானி டிரைஆக்சைட் (Antimony Trioxide), Phthalates ஆகியவற்றை வெளியேற்றுகிறதாம். இதில் ஆன்டிமானி டிரைஆக்சைட் புற்றுநோய், தோல் பிரச்சனைகள், பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்ப பிரச்சனைகளை உண்டாக்கலாம். மற்றொரு பொருளான Phthalates நம்முடைய ஆளுமைக்கு ஹார்மோனான நாளமில்லா சுரப்பியை மோசமாக்கும். 

பிளாஸ்டிக் பாட்டில்கள் உடலை பாதிப்பதோடு சுற்றுசூழலையும் பாதிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் 3.5 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. இவை மறுசுழற்சிக்கு முறையாக உட்படுத்தப்படுவதில்லை. இதனால் கழிவுகள் அதிகமாகி கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது நமக்கும் நாட்டுக்கும் நல்லது. 

click me!