மாங்காய் சாப்பிடுவதன் பலன்கள்
கோடைகாலத்தில் அதிக அளவிலான வெப்பத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்தை இழக்கிறோம். இதனால் சிலருக்கு உடல் வெப்பமடைந்து, லேசான காய்ச்சல் அல்லது சில நேரங்களில் சுய நினைவை இழக்க நேரிடும் அளவுக்கு ஆபத்துக்கள் ஏற்படும். ஆனால், மாங்காயை சாப்பிட்டு வருவதன் மூலமாக, அதில் இருக்கும் சக்தி வாய்ந்த குளிர்மிக்க உட்பொருள், நம் உடலில் உள்ள நீர்ச்சத்தை சீராக பராமரிக்கிறது. இதனால், அதிக வெப்பத்தால் ஏற்படும் இப்பிரச்சனையை மாங்காய் தடுக்கிறது.
மாங்காயில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. இது நம் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவி புரிகிறது. இதனால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டோடு வைத்து, இதய நோய் வருவதன் அபாயத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.