இந்தியா நொறுக்குத் தீனிகளுக்கும் பெயர்போன நாடு தான். இங்கு கிடைக்கும் விதவிதமான ரக ரகமான நொறுக்குத் தீனி வகைகளை வேறு எங்கும் பார்க்க முடியாது. அதனால் இந்திய நொறுக்குத் தீனி வகைகளை சாப்பிட ஆரம்பித்தால், பாக்கெட்டை காலி பண்ணாமல் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக சிப்ஸ் பாக்கெட் கிடைத்தாலும், மீண்டும்... மீண்டும் வாங்கி சாப்பிட்டுக்கொண்டே இருப்போம். ஒன்று, இரண்டு, மூன்று, சமயத்தில் நான்கு என பாக்கெட் பட்டியல் நீண்டு கொண்டே கூட செல்லும். ஆனால் நொறுக்குத் தீனி மீதான அதீத ஈர்ப்பு ஒரு மரபணுவால் தூண்டப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுதான் உணவுகளை சாப்பிடும் சாப்பிடு என்று சொல்லி மனிதர்களை தூண்டுகிறதாம். அதற்கு சி.ஆர்.டி.சி. 1 என்று பெயர், இது மனிதர்களுக்கு ஏற்படும் உடல் பருமனுடன் தொடர்புடையதாகும்.