திருமணமானவர்கள் தங்களுடைய துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க பல வழிகளில் முயற்சி செய்வர். தம்பதிகளுக்குள் இந்த முயற்சிகள் நெருக்கத்தையும் அதிக புரிதலையும் ஏற்படுத்தும். இதற்கு துணை மீதான காதல் தான் காரணம். ஆனால் அளவுக்கு மீறிய காதலின் வெளிப்பாடாக காமம் வெளிப்படும்போதுதான் அவர்களுடைய உறவு உறுதியாகிறது. உடலுறவில் கொடுக்கும் முக்கியத்துவங்கள் உறவை பலப்படுத்தும். இரவில் உறவு கொள்வதை விட அதிகாலையில் உறவு கொள்வது பல நன்மைகளை அளிக்கிறது. அது குறித்து இங்கு காணலாம்.
புத்துணர்வு
இரவில் வேலை செய்த களைப்பு இருக்கும். இதனால் உங்கள் உடல் உடலுறவுக்கு ஒத்துழைக்காது. எப்போது முடியும், தூங்கலாம் என்ற மனநிலையால் உடலும் மனமும் விரத்தியுடன் செயல்படும். ஆனால் இரவில் நன்றாக தூங்கி அதிகாலையில் உறவு வைத்துக் கொள்ளும்போது குளிருக்கு இதமாகவும், அரவணைப்பான உணர்வும் கிடைக்கும். அதிகாலையில் வைத்து கொள்ளும் நெருக்கமான உறவு அன்றைய நாள் முழுக்க உங்களை புத்துணர்வாக வைத்திருக்கும்.
ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகம்!
நமது உடலில் உள்ள ஹேப்பி ஹார்மோன்களில் ஒன்று, ஆக்ஸிடோசின். இது அதிகாலையில் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது அதிகமாக சுரக்கும். இதனால் மகிழ்ச்சியான மனநிலையும், புத்துணர்வும் கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியாக உணர்வீர்கள். உங்கள் துணையுடன் நெருக்கம் அதிகமாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறையும் கலோரிகள்!
உடலுறவில் செய்யப்படும் நிலைகள் உடற்பயிற்சிகளை ஒத்த பலன் அளிக்கக் கூடியவை. வெவ்வேறு நிலைகளில் உறவு வைத்து கொள்வது உடல் ரீதியான இயக்கம் என்பதால் கலோரிகள் குறைய உதவுகிறது. தீவிரமான உடலுறவு உங்களுக்கு சுலபமாக தேவையற்ற கலோரிகளை குறைக்க உதவும்.
இதையும் படிங்க: உடலுறவு வேண்டாம்னு விலகினால் இவ்வளவு பிரச்சனையா?
தூக்க சுழற்சி சீராகும்!
அதிகாலையில் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு ஹேப்பி ஹார்மோனான டோபமைன் அதிகமாக சுரக்கும். இந்த ஹார்மோன் தான் நமது தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும். அந்த நாள் முழுக்க உற்சாகமாக இருக்க உதவும்.
அதிகாலையில் உடலுறவு வைத்து கொண்டால் நோய்கள் குறையும். ஆரோக்கியமான மனநிலை நீண்ட ஆயுளை தரும். அதிகாலை உறவு வைத்து உங்களுடைய இணையர் மனம் கவர்வதோடு உடலையும் மேம்படுத்துங்கள்.