மழைக்காலம் வெப்பத்திலிருந்து நமக்கு நிவாரணம் அளிக்கிறது. இந்த சீசனில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். குறிப்பாக உணவு விஷயத்தில் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். அதிலும் பழங்களை பொருத்தவரை அதிக கவனம் தேவை.
27
Monsoon Diet Tips
பழங்கள் ஆரோக்கியத்தில் நன்மை மிகவும் பயக்கும். ஆனால் மழைக்காலத்தில் சில பழங்கள் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை ஆரோக்கியத்திற்கு நன்மைகள் வழங்குவதற்கு பதிலாக தீமையை விளைவிக்கும். அதுவும் மழைக்காலத்தில் அதிக நீச்சத்து நிறைந்த அல்லது வெட்டப்பட்ட பழங்கள் விரைவாக கெட்டுப் போக தொடங்கும். இதனால் அவற்றில் பாக்டீரியாக்கள், பூச்சிகள் வளரக்கூடும். அவற்றை சாப்பிட்டால் அஜீரணம், வயிற்று வலி, வயிறு உப்புசம் மற்றும் ஃபுட் பாய்சன் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே மழைக்காலத்தில் என்னென்ன பழங்களை சாப்பிடக்கூடாது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
37
முலாம்பழம் மற்றும் தர்பூசணி :
கோடைக்காலத்தில் தர்பூசணி மற்றும் முலாம்பழம் அதிகமாக சாப்பிடுவது நல்லது. ஆனால் மழை காலத்தில் அவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை ஈரப்பதத்தை அதிகமாக உறிஞ்சிவிடும் இதனால் சீக்கிரமாகவே கெட்டுப் போகும். எனவே இதை சாப்பிட்டால் வயிற்று பிரச்சினைகள் ஏற்படும்.
மழைக்காலத்தில் ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, போன்ற பெர்ரி பழங்களை சாப்பிட கூடாது. ஏனெனில் அவைகள் சீக்கிரமாகவே கெட்டுவிடும். இதனால் பாக்டீரியாக்கள் விரைவாக வளர ஆரம்பிக்கும். இது போன்ற சூழ்நிலையில் அவற்றை சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
57
மாம்பழம் :
மழைக்காலத்தில் மாம்பழம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாம்பழம் சூடான தன்மையை கொண்டுள்ளதால் மழைக்காலத்தில் இதை சாப்பிட்டால் வயிற்று எரிச்சல், அமிலத்தன்மை, வாயு, அஜீரணம், வயிற்றில் கனத்தன்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
67
பலாப்பழம்
மழைக்காலத்தில் பலாப்பழம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இந்த பழத்தில் சர்க்கரை ரொம்பவே அதிகமாக உள்ளது. மழைக்காலத்தில் இதை சாப்பிட்டால் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும். இதன் விளைவாக செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிற்று உப்புசம் ஏற்படுத்தும்.
77
அன்னாச்சி பழம்
அன்னாச்சி பழத்தில் இயற்கையாகவே அமலத்தன்மை அதிகமாக உள்ளன. மழைக்காலத்தில் இதை சாப்பிட்டால் சளி, இருமலை அதிகரிக்க செய்யும். இது தவிர அமிலத்தன்மை மற்றும் வயிற்று பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்