வாழைப்பழங்கள்.. நம்மால் எளிதில் வாங்கி உண்ணக்கூடிய ஒரு சிறந்த பழம் என்றால் அது வாழைப்பழம். ஒவ்வொரு ரக வாழைப்பழத்திலும், பலநூறு சத்துக்கள் இருக்கிறது. குறிப்பாக வைட்டமின் பி6 மற்றும் சி வாழைப்பழத்தில் அதிகம் இருக்கிறது. இதில் பைபர், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியமும் இருப்பதினால் உங்கள் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கிற பெருமளவு உதவுகிறது. உங்கள் இதயத்தையும் வெகுவாக பாதுகாக்கிறது.