குளிர்காலம் நம்மில் பலருக்கும் பிடித்த காலமாகும். ஏனெனில், இது கோடை வெப்பத்திலிருந்து உடலை இதமாக வைக்கும். அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதும் இந்த குளிர்காலத்தில் தான். எனவே இந்த நேரத்தில் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைக்க நாம் சாப்பிடும் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஆனாலும் குளிர்காலத்தில் சில உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன? அவற்றை ஏன் சாப்பிடக்கூடாது என்று இங்கு பார்க்கலாம்.
28
பச்சையான காய்கறிகள் :
கீரை, தக்காளி, வெள்ளரி போன்ற காய்கறிகள் உடலை குளிர்வித்து செரிமானத்தை மெதுவாக்கும். எனவே, உடல் சூடாக இருக்க காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதற்கு பதிலாக அவற்றை நன்கு வேக வைத்து அல்லது சூப் வடிவில் எடுத்துக்கொள்ளுங்கள். இதனால் செரிமானம் எளிதாகும்.
38
குளிர்ச்சியான பால்:
பால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் குளிர்காலத்தில் குளிர்ந்த பால் குடிக்கும் போது சளி, இருமல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக சூடான பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
48
நீர் பழங்கள் :
தர்பூசணி, முலாம்பழம் போன்ற நீர் சத்து நிறைந்த பழங்களை குளிர்காலத்தில் சாப்பிட்டால் செரிமானம் பாதிக்கப்படும். அதற்கு பதிலாக ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள் போன்ற பருவ காலங்களை சாப்பிடலாம். ஏனெனில் அவற்றில் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் அவை குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
58
இளநீர் :
இளநீர் உடலை நீரேற்றுமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்கும் என்றாலும், அது கோடை காலத்திற்கு தான் பொருத்தமானது. குளிர் காலத்திற்கு அல்ல. குளிர்காலத்தில் இதை குடித்தால் உடலை குளிர்விக்கும். எனவே குளிர்காலத்தில் இளநீர் குடிப்பதை தவிர்க்கவும்.
68
தயிர் :
தயிர் குளிர்ச்சியூட்டும் தன்மையை கொண்டது. குளிர்காலத்தில் இதை சாப்பிட்டால் சளி, இருமல் அறிகுறிகளை மோசமாக்கிவிடும். அதற்கு பதிலாக மோரில் இஞ்சி, சீரகம் மற்றும் சில மசாலா பொருட்கள் கலந்து குடிக்கலாம்.
78
எண்ணெயில் வறுத்த உணவுகள் :
குளிர்காலத்தில் எண்ணெயில் வறுத்த அல்லது பொறித்த உணவுகள் சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, உடல் எடையை அதிகரிக்கும். மேலும் செரிமானத்தை மந்தமாக்கும். இவற்றிற்கு பதிலாக ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
88
அதிக புளித்த உணவுகள் :
குளிர்காலத்தில் அதிக புளித்த உணவுகளை சாப்பிடுவது செரிமானத்தை மெதுவாக்கும். இதனால் வயிற்று உப்புசம், வயிற்று வலி, அசெளகரியம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இவற்றிற்கு பதிலாக புதிதாக சமைத்த சூடான உணவுகளை சாப்பிடுங்கள்.