காய்ச்சல் ஏதேனும் பாக்டீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணி தொற்று காரணமாக ஏற்படுகிறது. அதாவது உடல் வெப்பநிலை 37.5, 38.3 செல்சியஸைக் (99.5, 100.9 °F) கடக்கும் போது, அது காய்ச்சல் என்று கூறப்படுகிறது. உடல் வெப்பநிலை அதிகரிப்பதால் தசை வலி மற்றும் குளிர் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இருப்பினும், சில வீட்டு வைத்தியங்கள் காய்ச்சலுடன் வரும் அசௌகரியம் மற்றும் வீக்கத்தைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் அல்லது சில மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும். பராசிட்டமால் மற்றும் இப்யூபுரூஃபன் காய்ச்சலைக் குறைக்கும். இருப்பினும், பல்வேறு எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் காய்ச்சலைக் குறைக்கலாம். அதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.