2030ஆம் ஆண்டில், நீரிழிவு நோய் உலகளவில் ஏழாவது பெரிய கொலையாளியாக மாறும் என்று WHO கூறுகிறது. நீரிழிவு நோய் என்பது உடலில் இன்சுலின் அளவு குறையும்போது அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. நீரிழிவு நோயில் பல வகைகள் உள்ளன: வகை 1 நீரிழிவு, வகை 2 நீரிழிவு, கர்ப்பகால நீரிழிவு மற்றும் முன் நீரிழிவு.
விழிப்புணர்வு இல்லாமை மற்றும் தவறான நோயறிதல் ஆகியவை நீரிழிவு நிர்வாகத்தை இன்னும் கடினமாக்கும். ஆகையால் நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். அவர்களின் இரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தால், அவர்களுக்கு ஒரு சிறப்பு நீரிழிவு உணவு கூட பரிந்துரைக்கப்படுகிறது. சர்க்கரை உணவுகள், அதிக கார்ப் உணவுகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் ஆகியவை நீரிழிவு உணவு திட்டத்தில் சேர்க்க பரிந்துரைக்கப்படவில்லை. அவர்கள் உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். இயற்கையான முறையில் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும் பல மூலிகை கலவைகள் உள்ளன. அத்தகைய ஒரு கலவை வெந்தயம் ஆகும்.
இதையும் படிங்க: வெந்தயம் ரொம்ப குளிர்ச்சினு தெரியும்.. ஆனா தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டால் இத்தனை நன்மை கிடைக்குமா?
ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தங்கள் வீடுகளில் வெந்தயம் வைத்திருக்க வேண்டும். நீங்கள் வெந்தயம் முளைக்கட்டி சாப்பிடலாம் அல்லது காலை எழுத்தும் வெந்தய தண்ணீரை குடிக்கலாம்.
Image: Getty
வெந்தயம் எப்படி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது?
வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கான சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நீரில் 10 கிராம் வெந்தயத்தை தினமும் ஊறவைத்து சாப்பிட்டால் வகை-2 நீரிழிவு கட்டுப்படுத்த உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெந்தய தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!!
அதுபோல் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மை வெந்தயத்தில் உண்டு. இதில் நார்ச்சத்து உள்ளது மற்றும் செரிமான செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது. மேலும் உறிஞ்சுதலை ஒழுங்குபடுத்துகிறது. எனவே, உங்கள் உடலில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த தினமும்
வெந்தய நீர் குடிப்பது நல்லது.