Water With Meals : உணவு சாப்பிடும் இடைவெளியில் தண்ணீர் அருந்துவது சரியா?

First Published Sep 19, 2022, 12:45 PM IST

மனித உடலுக்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. உடலுக்கு நீரின் அளவு வலிமையையும், ஆரோக்கியத்தையும் தருகிறது. அதன்காரணமாக பல்வேறு ஊட்டச்சத்து நிபுணர்கள், மனிதன் நாளொன்றுக்கு 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். உடல்நலனின் தேவைக்கு போதியளவில் தண்ணீரின் அளவு இருக்க வேண்டும். இல்லையென்றால் பல்வெறு உடல்நலன் சார்ந்த பிரச்னைகளை நமக்கு ஏற்படும். தண்ணீர் அருந்தாமல் ஒரு சில வாரங்கள் வரை நாம் தாக்குப்பிடிக்கலாம். ஆனால் அதை தொடர்ந்து ஒரு நாளைக் கூட கடந்து செல்ல முடியாது. உடலில் இருந்து துர்நீர் வெளியேறவும், செரிமானம் ஏற்படவும், வியர்வை சுரக்கவும் தண்ணீர் தேவை முக்கியமானது. இதெல்லாம் தண்ணீர் குடித்தால் தான், சரியாக நடக்கும் என்பதை எப்போதும் மறந்துவிடக்கூடாது.
 

இன்றைய காலத்தில் பலரும் வேலை காரணமாக முறையாக தண்ணீர் குடிப்பது கிடையாது. உணவு சாப்பிடும் போது மட்டுமே பலரும் தண்ணீர் குடிக்கின்றனர். ஆனால் உணவு சாப்பிடும் இடைவேளையின் போது தண்ணீர் குடிக்கக்கூடாது என்பது நடைமுறை. ஆனால் உணவு சாப்பிட, சாப்பிட தண்ணீர் குடிப்பது செரிமானக் கோளாறை ஏற்படுத்தும். மேலும் உடலில் நச்சுத்தன்மை சேரும். இப்படிப்பட்ட பழக்கம் கூடுதலான உடல்நலப் பிரச்னைக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆயுர்வேதம் மருத்துவ முறையிலும், உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு உள்ளது.
 

தண்ணீர் அதிகம் குடிப்பதால், மனித வயிற்றில் இருக்கும் அமிலங்கள் வீரியமில்லாமல் போகும் என்று பலரும் நம்புகின்றனர். மருத்துவம் சார்ந்து நடத்தப்பட்ட எந்தவிதமான ஆய்வும், அதை உறுதி செய்யவில்லை. ஆனால் தண்ணீர் குடிக்க குடிக்க, உடலுக்கு தேவையான புரதச்சத்து ஊக்கும் பெறும். இது செரிமானத்துக்கு வலிமை சேர்க்கும். மேலும் செரிமானம் ஏற்படும் போது, உணவில் இருந்து மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் உடலுக்கு கிடைப்பதற்கு பேருதவி புரியும். போதியளவில் தண்ணீர் குடிப்பது செரிமானத்துக்கு எந்தவிதமான இடையூறும் செய்யாது என்பதே நிதர்சனம்.
 

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் மூலம் பெறும் ஊட்டச்சத்து உடலுக்கு கிடைக்கவும் தண்ணீர் தேவைப்படுகிறது. அதாவது, நீங்கள் அதிகமாக நார்ச்சத்து கொண்ட உணவை சாப்பிடும் போது, தண்ணீர் தவிப்பு உண்டாகும். அப்போது நீங்கள் தண்ணீர் குடித்த தீரவேண்டும். அதன்மூலமாகவே நார்ச்சத்து உங்களுடைய உடலுக்கு எந்தவித தடையுமின்றி கிடைக்கும். அதேபோன்று சாதாரனமாக சாலட் சாப்பிடும் போதும், நமக்கு தண்ணீர் தாகம் உண்டாகும். அப்போதும் நாம் தண்ணீர் அருந்த வேண்டும். காலம்தாழ்த்தக் கூடாது. முடிந்தவரை புரதச் சத்து அதிகமுள்ள உணவை சாப்பிடும் போது, அடிக்கடி தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

உணவு சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் நீங்கள் எப்படிப்பட்ட தண்ணீரை குடிக்கிறீர்கள் என்பது முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அறை வெப்பநிலை கொண்ட நீரை குடிப்பதன் மூலம், வயிற்றிலுள்ள அமிலங்கள் நடுநிலையுடன் இருக்கும். அதேபோன்று ஆப்பிள் சிடார் வினிகருடன் கலந்து தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். ஆனால் சாப்பிடும் போது நீர் அருந்தக்கூடாது. அதேபோன்று தாகம் எடுக்கும்போதும் தண்ணீர் குடிக்காமல் இருக்கக்கூடாது. அது மிகவும் அபாயமானது. சாப்பிடும் உணவுக்கு ஏற்ப, தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால் உணவு சாப்பிடும் போது தாக்கம் எடுத்தால், உடனடியாக தண்ணீர் குடியுங்கள்.
 

காலையில் எழுந்ததும் இரண்டு குவளை தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லது. இதன்மூலம் உங்களுடைய உறுப்புகள் சிறப்பாக செயல்படும். அதேபோன்று, காலை உணவுக்கு முன்னதாக தண்ணீர் அருந்துங்கள். இது உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றி விடும். மதிய உணவுக்கு 30 நிமிடங்கள் முன்னர், ஒரு குவளை தண்ணீர் குடிப்பது நல்லது. ஆனால் உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது தண்ணீர் அருந்துவது தேவையற்றது. இது செரிமானத்துக்கு உதவும் அமிலங்களை மட்டுப்படுத்திவிடும். அதேபோன்று சாப்பிட்டு முடித்து 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் அருந்துவது உடலுக்கு நன்மையை தரும். மேலும் குளிப்பதற்கு முன்னதாக ஒரு குவளை தண்ணீர் குடிக்கலாம். இது உடலிலுள்ள ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
 

click me!