இரத்த அழுத்தம் குறைதல்
இதயத்துக்குத் தேவையான இரத்தம் செல்லாததால் குறைந்த ரத்த அழுத்தமானது ஏற்படுகிறது. உடல் மற்றும் மனநிலையால் பிரச்சனைகளால், சில நிமிடங்களுக்கு இரத்த ஓட்டம் நின்று விடுகிறது. இதனால், இதயத்திற்கும் மூளைக்கும் செல்லும் இரத்தம் நின்று விடுவதால் இரத்த அழுத்தம் குறைகிறது.
குறைந்த இரத்த அழுத்தம் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் ஹார்மோன் பிரச்னை உள்ளவர்கள், வயதானவர்கள், ரத்த சோகை, கடுமையான நோய்த்தொற்று, இதய நோய், நுரையீரல் பிரச்னை, சிறுநீரகப் பிரச்னை மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கு முதல் 24 வாரங்களில் பொதுவாகவே குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படும். அந்த சமயத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது.
எப்படி சரிசெய்யலாம்
லேசான நீரிழப்பு ஏற்பட்டால் கூட சிலருக்கு குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படும். வாந்தி, கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல், கடுமையான உடற்பயிற்சி மற்றும் அதிகப்படியான வியர்வையால் உடலில் நீர்ச்சத்து குறைவதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தண்ணீரை அதிக அளவில் குடிக்க வேண்டும்.
உடலில் வைட்டமின் பி12, ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றின் குறைபாடு இருந்தாலும் இரத்த சோகை ஏற்படும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ரத்த அழுத்தம் குறையலாம். எனவே, மேற்சொன்ன சத்துகள் கொண்ட உணவை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்தம் குறைவதைத் தடுக்க, முதலில் குறைவான அளவில் கார்போஹைட்ரேட்டு உணவுகளை உண்ண வேண்டும். மது குடிப்பதையும் நிறுத்த வேண்டும்.
சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க பயன்படுகிறது. அதே சமயத்தில் அதிகமாக உப்பு சேர்ந்தால் இரத்த அழுத்தத்தை அதிகரித்து விடும் அபாயமும் உள்ளது. இது, இதய நோய்க்கும் வழிவகுக்கும். எனவே, இரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கத் தேவையான உப்பை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
சோடியம் நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.