நம்முடைய உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்பு சேர்வதால் தான் உடல் பருமனாக தெரிகிறது. உடலில் பிற இடங்களில் இருக்கும் கொழுப்பை கொஞ்சம் முயற்சி செய்தால் போதும் சுலபமாக குறைத்து விடலாம். ஆனால் அடிவயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதை கரைக்க அதிக முயற்சிகள் செய்ய வேண்டும். உணவு கட்டுப்பாடுடன் தினமும் சில உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும். எனவே, அடிவிற்று தொப்பையை வேகமாக கரைக்கக்கூடிய வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய உடற்பயிற்சிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
25
வாக்கிங் :
நடைப்பயிற்சி தான் கார்டியோ பயிற்சியிலேயே மிக எளிமையான பயிற்சியாகும். தொப்பையை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் நடைப்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். தினமும் சரிவிகித உணவுகளுடன் நடைப்பயிற்சி செய்து வந்தால் உடல் எடையை மிக வேகமாக குறைத்து விடலாம். நடைப்பயிற்சியானது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து கொழுப்பை வேகமாக குறைக்க பெரிதும் உதவுகிறது.
35
சைக்கிள் ஓட்டுதல் :
அடிவயிற்று தொப்பையை வேகமாக குறைக்க சைக்கிள் ஓட்டுதல் மிக சிறந்த பயிற்சியாகும். சைக்கிள் ஓட்டும்போது கலோரிகள் அதிகமாக எரிக்கப்படும், இடுப்பு மற்றும் தொடை பகுதியில் இருக்கும் கொழுப்புகள் தசைகள் குறையும். இதுதவிர இதயத்துடிப்பின் வேகமும் அதிகரிக்கும். எனவே நீங்கள் அருகில் எங்காவது செல்ல வேண்டி இருந்தால் அதற்கு பைக்கில் போகாமல் சைக்கிளில் போங்கள். இதனால் தொப்பையை வேகமாக குறைக்க முடியும்.
வெர்ட்டிக்கிள் லெக் பயிற்சி என்பது தரையில் படுத்து கால்களை மேலே தூக்கும் ஒரு எளிய பயிற்சி ஆகும். இந்த பயிற்சி செய்வதற்கு முதலில் தரையில் நேராகப்படுத்து கால்களை 90 டிகிரி கோணத்தில் மேலே தூக்க வேண்டும். பிறகு மெதுவாக மீண்டும் கீழே கொண்டு செல்லவும். ஆனால் தரையில் கால்களை வைக்கக்கூடாது. பின் வயிற்று தசைகளை இறுக்கி கால்களை மெல்லமாக அசைக்க வேண்டும். இந்த பயிற்சியை செய்தால் இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் வலுவடைவதோடு மட்டுமல்லாமல், அடி வயிற்றில் இருக்கும் கெட்ட கொழுப்பும் வேகமாக கரைய ஆரம்பிக்கும். இந்த பயிற்சியை காலை எழுந்தத பிறகு மற்றும் இரவு தூங்கும் முன் என இரண்டு வேளையும் சுமார் 20 நிமிடங்கள் செய்து வந்தால் நீங்கள் எதிர்பார்த்ததை விட வேகமாகவும், அதிகமாகவும் உங்கள் அடிவயிற்றை தொப்பை குறைந்து விடும்.
55
ஜூம்பா பயிற்சி :
இது மிகவும் ஜாலியாக செய்யக்கூடிய ஒரு எளிய பயிற்சி. ஒருவித நடனத்துடன் இந்த பயிற்சி செய்யக் கூடியது என்பதால் இதை ஆர்வமாக செய்ய தூண்டும். இந்த பயிற்சியானது ஒட்டுமொத்த உடலையும் இயங்கச் செய்யும். தினமும் இந்த ஜூம்பா பயிற்சி செய்து வந்தால் இதயம் பலப்படும், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் மற்றும் அடிவயிற்றில் இருக்கும் கொழுப்பும் குறையும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் கலோரிகள் வேகமாக குறையும். எனவே இன்றிலிருந்து இந்த பயிற்சியை செய்ய தொடங்குங்கள்.