Image: Getty Images
தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை விலக்கி வைக்கலாம் என்கிற பழமொழி சொல்லப்படுவதுண்டு. அதே அளவிலான பலனை நீங்கள் மாதுளைப் பழங்களை சாப்பிடுவதன் மூலம் அடையலாம். தினமும் 2 அல்லது 3 மாதுளைப் பழங்களை சாப்பிட்டு வந்தால், இருதய ஆரோக்கியம் மேம்படும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பழங்களில் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இதை சாப்பிடும் போது உயர் ரத்த அழுத்தப் பிரச்னைகள் இருந்தால், கட்டுக்குள் வரும். மேலும் மாதுளைப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி போன்ற மனிதனுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. இதன்மூலம் உடலில் எதிர்ப்புச் சக்தி மண்டலம் வலுவடையும். செரிமான பிரச்னைகளையும் மாதுளைப் பழங்கள் ஓட ஓட விரட்டும். இந்நிலையில் மாதுளையின் மற்ற நன்மைகள் குறித்து ஒவ்வொன்றாக தெரிந்துகொள்ளலாம்.
கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வரும்
மாதுளையில் உள்ள நைட்ரிக் அமிலம் தமனிகளில் உள்ள கொழுப்பு மற்றும் பிற படிவுகளை அகற்ற உதவுகிறது. அதன்காரணமாக உடலில் இருக்கும் 90 சதவீதத்திற்கும் அதிகமான கொலஸ்ட்ரால் கரைந்துபோகும். இதன்மூலம் இருதய நலன் மேம்படும்.
ரத்த ஓட்டம் சீராகும்
மாதுளையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும். இது இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. அதே சமயத்தில் சக்கரை நோயாளிகளும் மாதுளைப் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். இதற்கு நீரிழிவு நோய் தொடர்பான பிரச்னைகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் உள்ளது.
செரிமான பிரச்னையை தீர்க்கும்
மாதுளையில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. எனவே மாதுளை சாறு செரிமான பிரச்சனைகளுக்கு நல்லது. குடல் ஆரோக்கியத்தில் கோளாறு இருந்தாலும் மாதுளைப் பழங்களை தாராளமாக சாப்பிடலாம். மலச்சிக்கல் இருப்பவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடனடி தீர்வு கிடைக்கும்.
ஆண்கள் மிஸ் பண்ணக்கூடாத பெண்கள் நுட்பமான செக்ஸ் சிக்னல்கள்..!!
எடை இழப்புக்கு வழிவகுக்கும்
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மாதுளையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பொதுவாக 100 கிராம் கொண்ட மாதுளை விதையில் 83 கலோரிகள் உள்ளன. இதன்மூலம் பசி கட்டுக்குள் இருக்கும் மற்றும் உடல் எடையை அதிகரிக்காது.
சருமம் பொலிவு பெறும்
சிவப்பு நிற பழங்கள் சருமத்துக்கு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று பலரால் சொல்லப்படுவதுண்டு. அதற்கு மாதுளையும் விதிவிலக்கு கிடையாது. சருமம் பொலிவாக இருக்க மாதுளையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர்ச் சோறு, இனிப்பு உணவுகளில் மாதுளை விதைகளை சேர்த்து சமைக்கலாம்.