மோரில் இந்த 1 பொருள் கலந்து குடிங்க; இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பு கரைந்திடும்..!

Published : Feb 24, 2025, 01:14 PM ISTUpdated : Feb 24, 2025, 01:19 PM IST

Melt Belly Fat : கோடையில் தினமும் மோரில் இந்த ஒரு பொருள் கலந்து குடியுங்கள். இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பு விரைவில் கரைந்து விடும்.

PREV
15
மோரில் இந்த 1 பொருள் கலந்து குடிங்க; இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பு கரைந்திடும்..!
மோரில் இந்த 1 பொருள் கலந்து குடிங்க; இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பு கரைந்திடும்..!

கோடை காலம் வருவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் பல இடங்களில் ஆரம்பித்து விட்டது. எனவே கொடிகாலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது ரொம்பவே முக்கியம். இதற்காக சில இயற்கை பானங்களை நாம் குடிப்பது வழக்கம் அவற்றில் ஒன்றுதான் மோர். பல நூற்றாண்டுகளாகவே தமிழர்களின் ஆரோக்கிய பானமாக மோர் உள்ளது. கோடை காலத்தில் மோர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் அதில் சிறிதளவு இஞ்சி கலந்து குடித்தால் உடல் எடையை குறைக்க முடியும் தெரியுமா? ஆம், இது கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ஏனெனில், மோர் மற்றும் இஞ்சியில் இருக்கும் நற்பண்புகள் கலந்து உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கின்றன. தினமும் மோரில் இஞ்சி கலந்து குடித்து வந்தால் உடல் எடை மற்றும் இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பை கரைத்து விடலாம். இது குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

25
மோரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:

மோர் கோடைக்காலத்தில் ஒரு சிறந்த பானமாகும். இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. 100 மி.லி ஊரில் 40 கலோரிகள் உள்ளன. மோரில் பாலை விட கொழுப்பு மற்றும் கல்லூரிகள் குறைவாக உள்ளன. ஆனால், இது புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாக கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி மோரில் சிறிதளவு சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. மோரில் கால்சியம், புரதம், வைட்டமின் பி12, வைட்டமின் டி மற்றும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. எனவே எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாகும். 

இதையும் படிங்க:  கோடையில் உடல் சூட்டை தணிக்க சிறந்தது மோரா ? தயிரா? எதுவென்று தெரியுமா?

35
மோர் நன்மைகள்:

மோரில் இருக்கும் கால்சியம் எலும்புகளை வலிமையாக வைக்க உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியமாக வைக்க ஊக்குவிக்கும். மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாகவும் மற்றும் உடலை நச்சு நீக்கம் செய்யவும் உதவுகிறது. செரிமான பிரச்சனைகளை நீக்கவும், இதில் இருக்கும் அமிலம் வயிற்றை சுத்தப்படுத்தி அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது.

இதையும் படிங்க:  உடலை குளிர்ச்சியாக வைக்க அன்னாசிப்பழ மோர்க்குழம்பு.வேற லெவல் டேஸ்ட்டில் இருக்கும்.1 பருக்கை சாதம் கூட மிஞ்சாது

45
மோர் மற்றும் இஞ்சி பானம் தயாரிப்பது எப்படி?

சிறிதளவு தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு இஞ்சி துண்டை லேசாக நறுக்கி, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை வடிக்காமல் அப்படியே ஒரு கிளாஸில் ஊற்றி குடிக்க வேண்டும். தேவைப்பட்டால் இதனுடன் சீரக பொடி கலந்து கொள்ளுங்கள். இந்த பானத்தை நீங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் விரைவிலேயே நல்ல மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள்.

55
நினைவில் கொள்:

உடல் எடையை குறைக்க தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த அளவுக்கு தினமும் காலை நடற்பயிற்சியாவது செய்யுங்கள். அதுமட்டுமின்றி ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். இதனுடன் இந்த வானத்தையும் குடியுங்கள். உடற்பயிற்சி செய்து தொடர்ந்து இந்த பானத்தை குடித்து வந்தால் 30 நாட்களில் இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பு முழுவதுமாக கரைந்து விடும். ஸ்லிம் ஆகிவிடுவீர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories