உங்களுடைய உணவுப் பழக்கத்தில் தவறாமல் சேர்த்த்துக் கொள்ள வேண்டிய நட்ஸ்..!!

First Published | Mar 22, 2023, 6:12 PM IST

நட்ஸ் மிகவும் சத்தான உணவாகும். எடை இழப்புக்கு அவை பெரிதும் உதவுவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் இருதய ஆரோக்கியம் மேம்படுகிறது. கருவுறுதலில் பிரச்னைகள் இருந்தால் தவிர்க்கப்படுகின்றன. மேலும் இது புரதம் பெறுவதற்கான நல்ல மூலமாகவும் உள்ளன.

எலும்புகள், தசைகள் மற்றும் தோலை உருவாக்குவதற்கு புரதம் அவசியம். புரதம் பசியைக் குறைத்து ஆற்றலைப் பராமரிக்க உதவும். அனைத்து பருப்புகளிலும் புரதம் உள்ளது. அந்த வகையில் தினமும் ஒரு கையளவு சாப்பிட வேண்டிய் 4 விதமான கொட்டைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.
 

Image: Getty Images

பாதாம்

பாதாமில் புரதம் மற்றும் ஆண்டிஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளது. இதை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து உடலைப் பாதுகாக்கும் நட்ஸ் காவலாளி என்று கூட சொல்லலாம். ஊறவைத்த பாதாமை தினமும் சாப்பிடுவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

வால்நட்

இதில் இல்லாத சத்துக்களே கிடையாது என்று சொல்லலாம். இதில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், உணவு நார்ச்சத்து, அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் அதிக அளவு ஒமேகா -3 போன்ற அடிப்படையான ஊட்டச்சத்துக்கள் வால்நட்டில் உள்ளன. அக்ரூட் பருப்புகள் அதிக கலோரிக் மதிப்பைக் கொண்டிருந்தாலும், அவற்றில் உள்ள கொழுப்பு ஆரோக்கியமான கொழுப்பாகும்.இதனால் விரைவாக உடல் எடையும் குறைந்துவிடும்.

Latest Videos


முந்திரி

முந்திரி உண்மையில் சுவையானது. ஆனால் இது மற்ற பருப்புகளை விட குறைவான கலோரிகளைக் கொண்டுள்ளது. 100 கிராமில் 553 கலோரிகள் உள்ளன. முந்திரியில் இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. அதனால் இதை வெறும் வாயில் சாப்பிடுவது கூட, நன்மை தான். 

தொண்டை வலியை உடனடியாக போக்க உதவும் 5 உணவுகள்..!!

வேர்க்கடலை

இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றின் புரத உள்ளடக்கம் கோழி, இறைச்சி அல்லது சீஸ் உணவுகளுக்கு இணையாக இருக்கும். வேர்க்கடலையில் ரெஸ்வெராட்ரோல் என்ற பொருள் உள்ளது, இது இரத்த நாளங்கள் சுருங்குவதைத் தடுக்க உதவுகிறது. இது உடலை இளமையாக வைத்திருக்க பெரிதுவும் உதவுகிறது.

click me!