Health Tips-The beauty of pumpkin seed
பூசணிக்காய்
கிராமங்கள் மற்றும் நகரங்களில் பூசணிக்காயை திருஷ்டியை கழிப்பதற்காக உடைப்பது வழக்கம். அதேபோல், சிலர் மட்டும் பூசணிக்காயை சமைத்து உண்பார்கள். ஆனால், பலரும் இதனை சமையலில் இருந்து ஒதுக்கி தான் வைத்துள்ளனர். இருப்பினும், இதன் நன்மைகளை அறிந்து கொண்டால், பூசணிக்காயை ஒதுக்கி வைத்தவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்தியாவை பொறுத்த வரை பூசணி விதைகள் மருந்து தயாரிப்பதற்கு தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதனை உணவிலும் முழு அளவில் சேர்க்கிறார்கள். ஆனால் இந்தியர்களோ, இதனை பயன்படுத்துவதே மிகவும் அரிது தான். சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் இருக்கும் பூசணிக்காய் உலக அவில் அண்டார்டிகா கண்டத்தை தவிர, மற்ற அனைத்து இடங்களிலும் பயிரிடப்படுகிறது. பலர் பூசணிக்காயை சமைக்கும் போது, அதன் மருத்துவ மகிமைகளை அறியாமல் விதைகளை அப்படியே வெளியே கொட்டி விடுவார்கள். இது முற்றிலும் தவறான செயலாகும்.
பூகணிக்காயின் மருத்துவ குணங்கள்
பூசணி விதைகளில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளது.
நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரோல் போன்ற நோய்களுக்கு நிவாரணம் அளிக்க வல்லது. உடலிலுள்ள இரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
பூசணி விதையில் இருக்கும் துத்தநாகச் சத்துக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதால், செல்களின் வளர்ச்சிக்கு இது உதவுகிறது.
மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சினைகளை வராமல் தடுக்கிறது. உடல் வலிமை பெற பூசணி விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
சீரான தூக்கம்
தினந்தோறும் இரவில் பூசணிக்காய் விதைகளை சாப்பிட்டு வந்தால், மன அழுத்தம் குறைவது மட்டுமின்றி, தூக்கமும் சீராக இருக்கும் என பல ஆய்வு முடிவுகளின் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு அபாயம் குறையும்
குறிப்பாக, தினந்தோறும் 2 கிராம் என்ற அளவில் பூசணிக்காய் விதைகளைச் சாப்பிட்டு வந்தால், மாரடைப்பு அபாயம் குறையும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கீல்வாதம் போன்ற நோய்களில் இருந்து குணம் பெற பூசணிக்காய் விதைகளை சாப்பிடலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
தலைமுடி வளர்ச்சி
பூசணி விதைகளை சூப் அல்லது சாலட்டுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம், தேகம் உட்பட தலைமுடி வளர்ச்சியையும் மேம்படுத்தும்.