Sleep: தூக்கம் நமக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? நல்ல தூக்கம் எவ்வளவு நேரம் தெரியுமா?

First Published | Mar 2, 2023, 7:58 PM IST

நல்ல இரவுத் தூக்கம் என்பது அனைவராலும் வேண்டப்படுகிறது. ஏனெனில், நிம்மதியான தூக்கம் தான் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

sleep deprivation

மனிதர்கள் நலமுடன் வாழ்வதற்கு சத்தான உணவுகள் எப்படித் தேவையோ, அதேபோல் நல்ல தூக்கமும் தேவை. சரியான தூக்கம் இல்லையென்றாலும் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நல்ல இரவுத் தூக்கம் என்பது அனைவராலும் வேண்டப்படுகிறது. ஏனெனில், நிம்மதியான தூக்கம் தான் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

Image: Getty Images

நல்ல தூக்கம் 

நாம் அனைவரும் வேலை மற்றும் பொழுதுபோக்கிற்கு பின்னால் ஓடிக் கொண்டிருப்பதால், தூக்கம் என்பது நம்முடைய வாழ்க்கையில் முக்கியம் இல்லாத ஒன்றாகி விட்டது. இன்றைய காலகட்டத்தில் பலரும் இரவு வேலைக்கு செல்வதால், நல்லத் தூக்கத்தை இழந்து விடுகின்றனர். பகலில் தூங்கினாலும், அது இரவில் தூங்குவதைப் போன்ற நிம்மதியான தூக்கத்தை தராது. இருப்பினும், ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்திற்காக ஒதுக்க வேண்டும். நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உணவு மட்டுமின்றி, தூக்கமும் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும். தூக்கத்தின் அவசியம் மற்றும், போதிய தூக்கம் இல்லையெனில் என்ன நடக்கும் என்பதை இப்போது காண்போம்.

Latest Videos


naked sleep

தூக்கத்தின் அவசியம்

நன்றாக தூங்குவதன் மூலம் உடல் செயல்பாடுகளை பராமரிக்கலாம். மேலும், தசை திசுக்களையும் சரி செய்யலாம்.

புதிய தகவல்களை செயலாக்க மூளை அனுமதிக்கும். அதோடு, உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.

ஒருவருக்கு போதுமான அளவில் தூக்கம் இல்லையெனில், மனம் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். மேலும் நம் திறனையும் இது பாதிக்கும். 

Image: Getty Images

எவ்வளவு தூக்கம் தேவை?

18 வயதில் இருந்து 25 வயது வரை உள்ளவர்கள், தினந்தோறும் 7 முதல் 9 மணி நேரம் வரை தூங்கலாம். ஆனால், தூக்கம் 6 மணி நேரத்திற்கு குறைவாகவோ அல்லது 11 மணி நேரத்திற்கு மேலாகவோ போகக் கூடாது.
மிக ஆழமாகத் தூங்கும் சமயத்தில், உங்களின் அனௌத்து அடையாளங்களும் மறைந்து போகின்றன. தூக்கத்தில் வரும் கனவையும் தாண்டி, ஆழமான தூக்கத்துக்குச் செல்லும் போது, நீங்கள் ஒன்றுமில்லாத தன்மைக்குச் செல்ல நேரிடும்.

Water fasting: மாதம் ஒருமுறை தண்ணீர் விரதம் இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

தூக்கமின்மைக்கான காரணங்கள் 

தூக்கமின்மைக்கு சுற்றுப்புறச் சூழல், பதற்ற நிலை, கவலை மற்றும் நடுக்கம் போன்ற பல்வேறு பொதுவான காரணங்கள் இருக்கிறது.

இரத்த அழுத்தம், இருமல் மற்றும் மனச் சோர்வு போன்ற பிரச்சனைகளுக்குப் பயன்படுத்தும் மருந்துகளால் கூட தூக்கமின்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.  
 

click me!