உடலுறவின்போது ​​உங்க துணை இந்த தவறை செய்கிறாரா? நோட் பண்ணுங்க..!

First Published | Mar 2, 2023, 4:23 PM IST

தாம்பத்திய உறவின்போது துணையின் சில செயல்கள் உங்களை தொந்தரவு செய்யலாம். ஆய்வில் சில உண்மைகள் வெளியாகியுள்ளன. 

இல்லற வாழ்வில் அடிக்கடி உடலுறவு கொள்ளும் நபர்களுக்குள் கூடுதலான நெருக்கம் வர வாய்ப்புள்ளது. அது மனதில் கொண்டாட்ட மனநிலையை தூண்டு. உடலுறவு இல்லாத உங்கள் துணையின் முகம் நாளடைவில் சோகமாக மாறுவதை கூட நீங்கள் கண் கூட காணலாம். மகிழ்ச்சியை விதைக்கக் கூடிய தாம்பத்திய வாழ்க்கையில் வெளிப்படும் சில குணங்கள் உங்களையும், உறவையும் பாதிக்கலாம். அதை இங்கு காணலாம். 

உறவு கொள்வதை வெறுமனே உடல்கள் புணரும் நிகழ்வாக நினைக்கக் கூடாது. பாலியல்ரீதியான உணர்ச்சிகளை மட்டும் அனுபவிக்கிறேன் பேர்வழி என அந்தரங்க உறுப்பை தவிர மற்ற உறுப்புகளையும் புறக்கணிப்பது தவறு. உங்கள் துணையின் உடலே பாலியல் உணர்ச்சிகளின் குடோன் தான். அந்தரங்க உறுப்புகள் சிறந்தவைதான். இருப்பினும் உங்கள் துணையின் உடலின் மற்ற பாகங்களில் கவனம் செலுத்த வேண்டும். மொத்த உடலிலும் முத்த மழை பொழிந்து ஆராதிப்பதை பெண்கள் விரும்புவார்கள். ஆண்களுக்கும் இந்த விதி பொருந்தும். இதை பெரும்பாலானோர் செய்வதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Tap to resize

உறவு கொள்ளும்போது உங்களுடைய மொத்த எடையையும் அவர்கள் மீது போட்டு திக்குமுக்காட செய்யாதீர்கள். இதனால் உங்கள் துணை சுவாசிக்க முடியாமல் அதை சொல்லவும் முடியாமல் கொஞ்ச நேரத்தில் உறவு கொள்ளவே விருப்பம் இல்லாமல் விலகிவிடுவார். 

 நீங்கள் உறவை முடித்து கொள்ள போகும் தருணம் குறித்து துணையிடம் முன்கூட்டியே சொல்லவேண்டும். அதாவது உச்சம் அடைதல் அல்லது வாய்வழி உறவில் சில சிக்னல் தேவை. வாய் வழி உறவு செய்யும்போது அல்லது உடலுறவு கொள்ளும் போது, ​உங்கள் பார்டனரிடம் முன்கூட்டியே சொல்ல வேண்டும். போதும் என்பது போல உணர்த்தவேண்டும். இல்லையென்றால் அவர் அதிகம் இயங்கி நீங்கள் சுகம் காணாமல் போகலாம். அல்லது திகட்ட திகட்ட ஒருவரிடம் வெறுமனே எந்த சுகமும் இல்லாமல் சக்தியை இழக்க நேரிடும். 

உடலுறவின் போது உங்கள் துணையை முன்னாள் காதலனுடன்/ காதலியுடன் ஒப்பிடுவதை விட பெரிய தவறு வேறில்லை. நீங்கள் ஒரு முன்னாள் காதலுடன் எவ்வளவு அற்புதமான செக்ஸ் வாழ்க்கை வாழ்ந்திருந்தாலும், உடலுறவு கொள்ளும்போது அதைக் குறிப்பிடுவது நல்லது இல்லை. அதனால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

இதையும் படிங்க: குறையாத மோகம்.. இரவில் போடும் செக்ஸ் ரூல்ஸ்... ட்ரெஸ் கூட கழட்டாம இப்படியும் ஒரு கேவலமான தாம்பத்தியம் உண்டா?

ஆணோ, பெண்ணோ தாம்பத்திய உறவின்போது ஒருவரை ஒருவர் தொட்டு அறியவேண்டும். அப்போதுதான் அவர்களது மூளையில் இந்த தொடுதல் ரசாயன மாற்றத்தை உண்டு பண்ணும். அந்த தொடுதல் உண்டாக்கும் போதை மீண்டும் வேண்டுமென கேட்கும். உங்கள் கணவனை தொட்டு உணருங்கள். பெண்களின் முழங்கால்கள், மணிக்கட்டுகள், முதுகு, வயிறு ஆகியன ஆண்கள் தொடும்போது பெண்களை பித்து கொள்ள செய்யும் இடங்கள். முயன்று பாருங்கள். 

இதையும் படிங்க: எப்போது செக்ஸுக்கு கண்டிப்பா 'நோ' சொல்லனும்.. குறிப்பாக யாருக்கு சொல்லணும் தெரியுமா?

Latest Videos

click me!