எப்போது செக்ஸுக்கு கண்டிப்பா 'நோ' சொல்லனும்.. குறிப்பாக யாருக்கு சொல்லணும் தெரியுமா?
உடலுறவு கொள்வதில் பல விதமான நன்மைகள் இருந்தாலும் சில நேரங்களில் 'நோ' சொல்வது அவசியமாகிறது.
உடலுறவை பொறுத்தவரை இறக்கும்வரை கூட வைத்து கொள்ளலாம். மாதவிடாய் சமயங்களில், கர்ப்பம் தரித்த சமயங்களில் கூட சில கட்டுப்பாடுகளுடன் உறவு கொள்ளலாம். ஆனால் சில சமயங்களில் உடலுறவு கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். எப்போதெல்லாம் அப்படி தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.
ஒரு துணையுடன் உறவில் இருப்பது தான் நல்லது. ஒழுக்கசீலனாக இருக்க இந்த விஷயம் சொல்லப்படவில்லை. மணமுறிவுக்கு பின் இன்னொரு துணை, காதலில் பிரேக்-அப் எல்லாமே சகஜம் தான். அதில் தவறில்லை. ஆனால் உடலுறவில் தனித்தனியான போதைசுகம் காண சிலர் பலரோடு உறவு கொள்கின்றனர். இதனால் உறவுச்சிக்கல், பரவும் பால்வினை நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு. ஆகவே நல்ல புரிதல் கொண்ட ஒரே ஒரு துணையுடன் உறவு கொள்வது நல்லது. மற்றவர்களுக்கு 'நோ' தான்.
பாலியல் வன்கொடுமை ஒருபக்கம் அதிகரிக்கிறது, மற்றொரு பக்கம் சிறுமியரை குரூமிங் பண்ணி அவர்களின் ஒப்புதலோடு பாலுறவில் ஈடுபடுகிறார்கள். இது குற்றம். 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் சம்மதமே சொன்னாலும் அவரோடு உறவு கொள்தல் குற்றம். மைனராக இருக்கும் சிறுமி/ சிறுவர்களாக இருந்தால் நோ செக்ஸ் என்பது சட்டம். மீறினால் தண்டனையே கிடைக்கும்.
உங்களுடைய திருமண உறவில் இருந்து வெளியேறிவிட்டால், விருப்பம் போல் மற்றொரு துணையுடன் வாழலாம். அதைவிட்டு ஒருவரோடு உறவுக்குள் இருக்கும்போதே மற்றொருவருடன் கள்ள உறவில் இருப்பது தவறு. யாராவது உங்கள் மனதை மாற்றி கள்ள உறவுக்கு தூண்டினாலும் அழுத்தம் திருத்தமாக நோ சொல்லுங்கள். நீங்கள் தயங்கினால் அவர்கள் சம்மதமாக எடுப்பார்கள். அப்போது க்ளீயர் நோ சொல்லவேண்டும்.
உங்கள் பார்ட்னருக்கு தொற்றுநோய் இருந்தால் செக்ஸை தவிர்ப்பது இருவருக்குமே நல்லது. ஒருவேளை நீங்கள் அந்நியர்களுடன் உறவு கொள்ளும் முன் அவர்களது நோய் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் இது போன்றஉறவுகளால் பரவும் பாலியல் தொற்றுநோய்கள் ஏராளம். இந்த மாதிரி சமயம் நோ சொல்வது உங்களுக்கு நல்லது.
இதையும் படிங்க: குறையாத மோகம்.. இரவில் போடும் செக்ஸ் ரூல்ஸ்... ட்ரெஸ் கூட கழட்டாம இப்படியும் ஒரு கேவலமான தாம்பத்தியம் உண்டா?
உங்களுடைய துணையாக இருந்தாலும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் செக்ஸ் கூடாது. நலமாக இருந்து அவர் உறவு கொள்ள விருப்பமில்லை என்று சொன்னாலும் செக்ஸ் கூடாது. வற்புறுத்தி உறவு கொள்ளுதல் குற்றம் அதை ஒருபோதும் செய்யாதீர்கள். பணியிடங்களில் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுக்கு சாதகமாக காய் நகர்த்தி சக ஊழியர்களிடம் தகாத முறையில் உறவு கொள்ள முனைவது தவறு. உங்களிடம் யாரேனும் அப்படி முயன்றால் 'நோ' சொல்லிவிட வேண்டும். ஒருவரை பயமுறுத்தி செக்ஸ் வைப்பது கூடாது.
இதையும் படிங்க: கணவரிடம் திருப்தியில்லை.. இப்போ முன்னாள் காதலனுடன் பேசுவது தவறா? வாசகிக்கு நிபுணர் அட்வைஸ்