உடலுறவு வைத்து கொள்ளும் முன் எதை செய்ய வேண்டும்? எதை செய்ய கூடாது என்பதில் தெளிவு வேண்டும். அப்போது தான் அந்த நேரத்தில் முழு இன்பத்தை அனுபவிக்க முடியும். அதுமட்டுமில்லை நம்முடைய ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் அது அவசியமானது. எப்போதும் உடலுறவு கொள்ளும் முன்பு கவனத்தில் வைக்க வேண்டிய விஷயங்கள் குறித்து காணலாம்.
பெண்களுடன் உடல் ரீதியான உறவை வைக்கும் முன்னும் பின்னும் சிறுநீர் கழிப்பது மிகவும் முக்கியமான விஷயம். இப்படி செய்வதால் சிறுநீர்ப்பை காலியாகிவிடும். இதனால் உறவு கொள்ளும்போது சிறுநீரகத்தின் மீது அழுத்தம் குறையும். இதனால் உடலுறவில் அதிகம் இன்பம் பெறலாம்.
பெண்களுக்கு உச்சக்கட்டம் வரும் போது அவர்களுக்கு சிறுநீர் கழிக்க தோன்றும். அப்போது அவர்களின் கவனம் சிறுநீர் மீது குவிந்துவிடும். அதனால் உடலுறவுக்கு முன், பின் ஆகிய வேளைகளில் பெண்கள் சிறுநீர் கழிப்பது அவசியமாகிறது. இது பெண்களின் இடுப்பு தளத்திற்கு ரொம்ப நல்லது.
உடலுறவை ஏற்படுத்திய பிறகு சிறுநீர் கழிப்பது பரவும் பால்வினை நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைக்கிறது. சிறுநீருடன் பாக்டீரியா வெளியேற்றப்படுகிறது. பெண்களின் சிறுநீர்க்குழாய் ஆண்களை விட மிகச் சிறியது, இந்த விஷயத்தில், பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பை வழியாக எளிதாக மாற்றப்படுகின்றன. அதனால் உடலுறவுக்கு பின் சிறுநீர் கழிப்பது நல்லது. உடலுறவு கொண்ட பிறகு எரிச்சல், ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
இதையும் படிங்க: உடலுறவின்போது உங்க துணை இந்த தவறை செய்கிறாரா? நோட் பண்ணுங்க..!