நரைமுடி
நரைமுடி பிரச்னைகளுக்கு எவ்வளவு தான் டை அடித்தாலும், அது ரசாயனம் என்பதால், பக்க விளைவுகள் ஏற்படவும் அதிகளவில் வாய்ப்புள்ளது. இதனால், நரைமுடியைப் போக்க இயற்கை முறையில் தான் நாம் தீர்வு காண வேண்டும். இயற்கை முறைத் தீர்வு தான் நிரந்தரமானதும் கூட.
தற்போது நரைமுடி வராமல் தடுக்கப் பல வழிமுறைகள் உள்ளது. ஆனால், நரைமுடி வந்தபின் எவ்வாறு நரைமுடியை கருமையாக மாற்ற முடியும் எனத் தெரியுமா? அதற்கான அருமையான பலனளிக்கும் எளிமையான வழியை நாம் இங்கு காண்போம்.
சமையலில் நாம் அதிகம் பயன்படுத்தும் பொருள் உருளைக்கிழங்கு. இதில் தேவையான விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளதால், கூந்தலில் மெலனின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் நரை முடி மெல்ல மெல்ல மறைந்து, கருமையான கூந்தல் கிடைக்கும்.
2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் உருளைக்கிழங்கு தோல் சிலவற்றை போட்டு வேக விட வேண்டும். வெந்த பிறகு, கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து, பின் தண்ணீரை ஆறவிடவும். ஆறிய பிறகு, அந்த நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதன் பின்னர், தலைமுடியை நன்றாக சாதாரண நீரில் நனைத்து விட்டு, வடிகட்டிய நீரில் மெதுவாக ‘ஸ்கால்ப்பில்’ மசாஜ் செய்ய வேண்டும். 5 நிமிடங்கள் வரை இந்த வடிகட்டிய நீரில் தலைமுடியை ஊறவிட வேண்டும். பின்னர், தலையை அலசி விட வேண்டும். இது போல, வாரம் இரு முறை அல்லது மூன்று முறை செய்து வந்தால் சில வாரங்களிலேயே நரைமுடி மறைந்து, கருமையான முடிகள் வளர ஆரம்பிக்கும்
belly fat : தொப்பையைக் குறைக்க இந்த மேஜிக் பானத்தை குடிங்க!