Balasana
பாலாசனம் (Balasana)
எப்படி செய்வது: தரையில் மண்டியிட்டு, உங்கள் குதிகால் மீது உட்கார்ந்து, குனியுங்கள். அப்போது, உங்கள் கைகளை முன்னோக்கி நீட்டவும். உங்கள் மார்பை படுக்கையில் வைத்து ஆழமாக சுவாசிக்கவும்.
பலன்கள்: முதுகு மற்றும் இடுப்பை வலியை நீங்கும். பதற்றத்தைப் போக்க உதவுகிறது
Marjaryasana-Bitilasana
மர்ஜரிசனம் & பிடிலாசனம் (Marjaryasana-Bitilasana)
எப்படி செய்வது: உங்கள் கைகள் மற்றும் முழங்கால்களை தரையில் ஊன்றி உங்கள் முதுகை வளைக்கவும், உங்கள் சிறிது நேரம் முதுகுப் பகுதியை மேலையும் (மாடு போல்) சிறிது நேரம் கீழேயும் மாற்றவும் (பூணை போல்)
பலன்கள்: முதுகெலும்பின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இயக்கத்தை அதிகரிக்கிறது, மேலும் முதுகெலும்பை உறுதிப்படுத்துகிறது மற்றும் வலுப்படுத்துகிறது.
Adho Mukha Svanasana
அதோ முக ஸ்வனாசனம் (Adho Mukha Svanasana)
எப்படி செய்வது: இயல்பாக நின்றை நிலையில் இருந்து இரு கைகளையும் தரையில் ஊன்றி தலைகீழான V போல் நிற்கவும்.
பலன்கள்: கால்கள், கைகள் மற்றும் முதுகெலும்பு வலியை நீக்குகிறது. முதுகு மற்றும் தோள்களை வலுப்படுத்துகிறது; இது மன அழுத்தத்தை சீராக்குகிறது.
setu bandhasana
சேது பந்தாசனம் (Setu Bandhasana)
எப்படி செய்வது: உங்கள் முழங்கால்களை வளைத்து, உங்கள் பாதங்கள் இடுப்பு இடைவெளியில் உங்கள் முதுகில் படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகளை உங்கள் முதுகுக்குப் பின்னால் வைத்து, உங்கள் இடுப்பை மேல் நோக்கி உயர்த்தும்போது உங்கள் பாதங்களை படுக்கையில் அழுத்தவும்.
பலன்கள்: முதுகு, கால்களை வலுப்படுத்துகிறது; மார்பு மற்றும் முதுகெலும்பு வலியை நீக்குகிறது. உங்கள் உடல் செழிப்பை வளப்படுத்தும்
Supta Matsyendrasana
சுப்த மத்ஸ்யேந்திராசனம்(Supta Matsyendrasana)
எப்படி செய்வது: உங்கள் கைகளை நேராக வைத்து, உங்கள் முதுகில் படுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முழங்கால்களை வளைக்கும்போது உங்கள் பாதங்கள் தரையில் தட்டையாக இருக்க வேண்டும். உங்கள் முழங்கால்களை, உங்கள் தோள்களை பாயில் வைத்து, உங்கள் கீழ் உடலை ஒரு பக்கமாக மெதுவாக திருப்பவும். அதைப் பிடித்துக் கொள்ளுங்கள், பின்னர் பக்கங்களை மாற்றவும்.
பலன்கள்: முதுகெலும்பு மற்றும் இடுப்பு வலியை நீக்குகிறது. முதுகு மற்றும் தோள்களில் தசைப் பிடிப்பு இருந்தால் உடனடியாக நீங்கும்.
மாரடைப்பு அல்லது நெஞ்சரிச்சல்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?