Covid 19 JN1 Variant: புதிய வகை கொரோனா வைரஸ் பற்றி தெரியுமா? இதுதான் அறிகுறிகள்

Published : May 21, 2025, 03:31 PM IST

தற்போது பரவி வரும் JN1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் குறைவான வீரியம் கொண்டது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

PREV
13

Details on jn1 Coronavirus : உலகின் சில நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல்கள் வெளியான சில நாட்களில் இந்தியாவிலும் பரவத் தொடங்கியது. சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவில் 250க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியானது. இந்நிலையில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் JN1 (Covid 19 JN1 Variant) பரவுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

23

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது பரவி வருகிற ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸின் திரிபுதான் JN1 ஆகும். இது வேகமாகப் பரவினாலும் வீரியம் குறைவானது தான் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

33

அறிகுறிகள்

உடல் பலவீனம், காய்ச்சல், தொண்டை வலி, இருமல், உடல் வலி போன்றவை தான் புதிய கொரோனா தொற்றுக்கும் அறிகுறிகளாக உள்ளன. மற்ற வகை ஒமைக்ரான் வைரஸ்களை ஒப்பிடும்போது இது அந்தளவுக்கு தீவிர பாதிப்பை உண்டாக்குவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories