சிறுநீரக கற்கள் உருவாக பல காரணிகள் இருந்தாலும், நாம் செய்யும் சில தினசரி பழக்க வழக்கங்கள் சிறுநீரக கற்களை உருவாக்குகின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சிறுநீரக கற்கள் உருவாவதற்கு மிக முக்கியமான காரணம் குறைவாக தண்ணீர் அருந்துதலே. தேவையான அளவு தண்ணீர் குடிக்காத போது சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புக்கள் அடர்த்தியாக படிகங்களாக மாறி கற்களாக உருவாகின்றன. குறைந்தது தினமும் 8 முதல் 10 கிளாஸ் (சுமார் 3 லிட்டர்) தண்ணீர் அருந்த வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் பொழுது அதிக சிறுநீர் வெளியேறுகிறது. இதன் காரணமாக அதில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகள் வெளியேற்றப்படுவதால் கல் உருவாகும் அபாயம் குறைகிறது. எனவே போதுமான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
25
உணவில் உப்பின் அளவைக் குறைத்தல்
சிறுநீரக கற்கள் உருவாவதற்கு அதிகமான உப்பு உட்கொள்ளுதல் ஒரு முக்கிய காரணமாகும். பெரும்பாலானவர்கள் தங்களுடைய அன்றாட உணவில் அதிக அளவு உப்பை பயன்படுத்துகின்றனர். தேவைக்கு அதிகமான உப்பு உட்கொள்ளுதல் சிறுநீரகங்களை பெருமளவு பாதிக்கிறது. உலக சுகாதார அமைப்பின்படி ஒருவர் ஒரு நாளைக்கு 5 கிராம் அளவிற்கு மேல் உப்பு சாப்பிடக்கூடாது. இந்த அளவை விட குறைவாக சாப்பிடுவதும் தவறானது. சிறுநீரக கல் பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்கு உணவில் சரியான அளவு உப்பு எடுத்துக் கொள்வதையும், துரித உணவுகள், பதப்படுத்த உணவுகள், சிப்ஸ் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டியதும் அவசியம்.
35
ஆக்சலேட் நிறைந்த உணவுகளை குறைவாக எடுத்தல்
ஆக்சலேட் நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வது சிறுநீரக கற்களை உருவாக்கும். ஆக்சலேட் என்பது உணவுப் பொருட்களில் காணப்படும் ஒரு இயற்கையானப் பொருளாகும். இது கல்சியத்துடன் இணைந்து கால்சியம் ஆக்சலேட் கற்களை உருவாக்கலாம். தக்காளி, கீரை, பாதாம், நட்ஸ் வகைகள், சாக்லேட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, தேநீர் ஆகியவற்றில் அதிக அல்லது ஆக்சலேட் நிறைந்துள்ளது. இந்த உணவுகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தசைகள் வளர்வதற்கு புரதச்சத்து அவசியம். அதே சமயம் அதிக அளவு புரதத்தை எடுத்துக் கொள்வது சிறுநீரகங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக சிவப்பு இறைச்சி, முட்டை, போன்ற விலங்கு புரதங்களை அதிகமாக உட்கொள்வது சிறுநீரில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். இது யூரிக் அமில கற்கள் உருவாக வழி வகுக்கலாம். மேலும் கற்கள் உருவாவதை தடுக்க உதவும் சிட்ரேட் என்னும் பொருளின் அளவையும் விலங்குகளின் புரதங்கள் குறைத்து விடுவதால் கற்கள் எளிதில் உருவாக வாய்ப்பு உண்டு. யூரிக் அமிலம் அதிகமாகும் பொழுது சிறுநீர் அதிக அமிலத்தன்மை கொண்டதாகவும் மாறுகிறது. இதன் காரணமாக சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
55
சிறுநீரக கற்கள் உருவாதற்கான காரணங்கள் என்ன?
இது மட்டுமல்லாமல் சிறுநீரை அடக்கி வைத்தல் சிறுநீரக கல் உருவாக காரணமாகிறது. மேலும் குறைவான கால்சியம் உட்கொள்வது, அதிக சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவது, அதிகப்படியான காஃபின் மற்றும் கார்பனேட்டட் பானங்களை உட்கொள்வது, அதிக உடல் எடை கொண்டவர்கள், சில வகை மருந்துகள், ஒற்றைத் தலைவலிக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கலாம். சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பதற்கு அதிக நீர் அருந்துதல், உப்பை குறைவாக சாப்பிடுதல், சிட்ரஸ் பழங்களை சாப்பிடுதல், சமச்சீர் உணவு எடுத்தல், புரதத்தை தேவையான அளவு உட்கொள்ளுதல் ஆகியவை அவசியம்.